கோவையில் நம்ம ஊரு சந்தை...

published 3 weeks ago

கோவையில் நம்ம ஊரு சந்தை...

கோவை: இயல்வாகை என்ற அமைப்பினர் சார்பில்  நம்ம ஊரு சந்தை என்ற பெயரில் இயற்கை விவசாயம் சார்ந்த பொருட்கள் விற்பனை செய்யும் சந்தையை பல்வேறு பள்ளி வளாகங்களில் நடத்தி வருகின்றனர். 

 

பல்வேறு பகுதிகளில் மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை இந்த சந்தையானது நடைபெறும். அதன்படி இன்றைய தினம் கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நம்ம ஊரு சந்தை நடைபெற்றது.

இதில் பல்வேறு விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்த காய்கறிகள், பழங்கள், கம்பு குதிரைவாலி உள்ளிட்ட பல்வேறு அரிசிகள், நாட்டுச்சக்கரை,  கடலை உருண்டை, கம்பு உருண்டை, உள்ளிட்ட சத்தான தின்பண்டங்கள், கூழ் வகைகளை விற்பனை செய்தனர்.


மேலும் செக்கில் ஆட்டிய எண்ணெய், தேன் மூங்கிலால் செய்யப்பட்ட வீட்டு உபயோக பொருட்கள் ஆகியவையும் விற்பனை செய்யப்பட்டன.

இந்த சந்தையில் நெகிழி பயன்படுத்தாமல் பொருட்கள் விற்பனை நடைபெறுவதால்  பொதுமக்கள் பலரும் வீட்டிலிருந்தே பாத்திரங்களை எடுத்து வந்து பொருட்களை வாங்கி சென்றனர். மேலும் இங்கு நெகிழி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பைகள், கவர்களில் பொருட்கள் கட்டித்தரப்படுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe