கோவையில் தீபாவளியை புறக்கணித்த பெரியாரிய அமைப்பினர்...

published 2 weeks ago

கோவையில் தீபாவளியை புறக்கணித்த பெரியாரிய அமைப்பினர்...

கோவை: கோவையில் தீபாவளியை புறக்கணித்து நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்றைய தினம் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் பலரும் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கும் கொண்டாடி வருகின்றனர். நரகாசுரனை முருகர்/ கிருஷ்ணர் வதம் செய்த நாளாக தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நரகாசுரன் தமிழரின் முன்னோர் எனவும் அவரது இறப்பை கொண்டாடுவது முறையல்ல அவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்று பெரியாரிய அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மேலும் ஆரியர்கள் பல்வேறு இதிகாச கதைகளில் நம்முடைய முன்னோர்களை தவறாக சித்தரித்து உள்ளதாகவும் குறிப்பிடும் பெரியாரிய சிந்தனையாளர்கள் தீபாவளியை புறக்கணிப்பர். மேலும் இந்நாளில் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியையும் மேற்கொள்வர்.

அதன்படி இன்றைய தினம் கோவையில் பெரியார் படிப்பகத்தில் நரகாசுரனுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நரகாசுரனுக்கு வீரவணக்கம் என்ற முழக்கங்களையும் தீபாவளியை புறக்கணிப்போம் என்ற முழக்கங்களையும் எழுப்பினர்.

தொடர்ந்து இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் மாட்டு இறைச்சி பிரியாணி மற்றும் பன்றி கறி உணவும் வழங்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe