சூலூர் பகுதியில் 360 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்...

published 1 week ago

சூலூர் பகுதியில் 360 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்...

கோவை: கோவை, சூலூர் பகுதியில் சுமார் 360 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப் பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். 
 

அதன் அடிப்படையில் சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்படை காவ‌ல் துறை‌யின‌ர் சம்பவம் இடமான முத்து கவுண்டன் புதூர் அருகே சென்று சோதனை மேற்கொண்ட போது புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்து இருந்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் பாண்டி (39) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து சுமார் ரூபாய் 3,13,000 /- மதிப்புள்ள  360 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe