ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பற்றி மருத்துவ சிகிச்சை- கோவை ரயில் நிலையத்தில் தத்துரூபமாக ஒத்திகை...

published 4 weeks ago

ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை காப்பற்றி மருத்துவ சிகிச்சை- கோவை ரயில் நிலையத்தில் தத்துரூபமாக ஒத்திகை...

கோவை: கோவையில் உள்ள ராமகிருஷ்ணா (தனியார்) மருத்துவமனை மற்றும் சேலம் கோட்ட கோவை ரயில்வே துறையினர், மீட்பு பணித்துறையினர், காவல்துறையினர் இணைந்து கோவை ரயில் நிலையத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு ரயிலுக்குள் பயணிகள் காயமடைந்ததை போன்றும் அவர்களை காப்பாற்றுவது போன்றும் சித்தரித்து ஒத்திகை நிகழ்ச்சி ஒன்றை தத்ரூபமாக செய்து காட்டினர்.

காயமடைந்தவர்கள் போன்று நடித்தவர்களுக்கு ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், கோவை மாவட்ட மீட்பு பணி துறையினர், காவல்துறையினர் மீட்பது மருத்துவ சிகிச்சை அளிப்பது போன்ற செயல்பாடுகள் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் இடம்பெற்றன. இந்நிகழ்வில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்வை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை ஆணையாளர் ஸ்டாலின், இது போன்ற நேரங்களில் பொதுமக்கள் பதற்றம் அடையாமல் உடனடியாக ரயில்வே போலிசார், மருத்துவத்துறை க்கு தகவல் கொடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கினார்.

கோவை மாநகரில் சமீபத்தில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது குறித்தான கேள்விக்கு,  பள்ளிகளுக்கு வரும் வெடிகுண்டு மிரட்டல் சம்பந்தமாக IP Address கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகிறோம் எனவும் Microsoft நிறுவனத்தின் உதவியுடன் அந்த பணிகள் மேற்கொண்டு வருகிறோம் எனவும் பதிலளித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe