கோவை மாவட்டத்தில் 50 ஏக்கர் மேய்க்கால் நிலங்கள் புனரமைப்பு

published 2 years ago

கோவை மாவட்டத்தில் 50 ஏக்கர் மேய்க்கால் நிலங்கள் புனரமைப்பு

கோவை: கோவை மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு மேய்க்கால் நிலங்கள் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. கிராமப்புற பொருளாதாரத்திற்கு கால்நடைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

குறிப்பாக, கால்நடைவளர்ப்பு சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கிறது. குறைந்த நிலப்பரப்புடன், விவசாயிகள் பாரம்பரியமாக தங்கள் கால்நடைகளின் தீவன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பொதுவான மேய்ச்சல் நிலத்தை நம்பியுள்ளனர். மேய்க்கால் நில புனரமைப்பு திட்டத்தின் மூலம், கால்நடைகளுக்கு தீவனம் கிடைப்பதை கணிசமாக அதிகரிக்க முடியும். 

மாவட்டத்தில் மாநில தீவின அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மேய்க்கால் நில புனரமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. பசுந்தீவன தட்டுப்பாடு இல்லா மாவட்டமாக மாற்றிட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்புத் துறையின் மூலம் மேய்க்கால் நிலங்களை புனரமைப்பு செய்து, தீவன பயிர் சாகுபடி செய்வது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பாக கடந்த ஆண்டு முதல் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

கோவை மாவட்டத்தில் இதற்கென 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு திட்ட செயலாக்கம் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe