பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடக்கம்! வெளிநாடுகளிலிருந்து வந்த ராட்சத பலூன்கள்!

published 22 hours ago

பொள்ளாச்சியில் பலூன் திருவிழா தொடக்கம்! வெளிநாடுகளிலிருந்து வந்த ராட்சத பலூன்கள்!

கோவை: பொள்ளாச்சியில் 10வது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா இன்று தொடங்கியுள்ளது.

வெப்பக் காற்று பலூன் திருவிழா வெளிநாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த நிலையில், கடந்த ஒன்பது ஆண்டுகளாக பொள்ளாச்சி பகுதியில் பறக்க விடப்பட்டு வருகிறது.

அதன்படி, 10வது சர்வதேச வெப்பக் காற்று பலூன் திருவிழா பொள்ளாச்சியில் இன்று காலை 5:30 மணியளவில் தொடங்கியது.

இந்த திருவிழாவில் அமெரிக்கா, தாய்லாந்து, ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் மற்றும் பெல்ஜியம் நாடுகளிலிருந்து 11 பலூன்கள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இந்த வெப்பக்காற்று பலூன்கள் பொள்ளாச்சி ஆச்சிபட்டி மைதானத்திலிருந்து வானில் பறக்க விடப்பட்டன.

வெப்பக்காற்று நிரப்பப்பட்ட பலூன்கள், அதற்கென பிரத்தியேக பைலெட்டுகளை கொண்டு வானில் பொள்ளாச்சியைச் சுற்றி பரப்பவிடப்படுகின்றன.

வரும் 16ஆம் தேதி வரை நடைபெறும் பலூன் திருவிழாவைக் காண பொதுமக்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் திரண்டனர். நரி, புலி, மிக்கி மவுஸ் உருவத்திலான பலூன்கள் குழந்தைகளைக் கவர்ந்தன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe