96 வயது மூதாட்டியின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக கொடுக்கப்பட்டது...

published 4 days ago

96 வயது மூதாட்டியின் உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானமாக கொடுக்கப்பட்டது...

கோவை: கோவை ஒண்டிப்புதூர் ஸ்டேன்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி(96).  இவர் திராவிடர் கழகத்தில் காப்பாளராக பதவி வகித்து வந்தவர்.

96வயதான இவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். உயிரிழந்த பிறகு அவரது உடலை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு ஆராய்ச்சிக்காக தானமாக அளிக்க ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்த நிலையில் அவரது உடலை  குடும்பத்தினர்கள் கோவை அரசு மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.

ரங்கநாயகியின் கணவர்
வசந்தம் ராமச்சந்திரன் திராவிடர் கழக முன்னாள் மாவட்ட தலைவராக இருந்ததும் அவர் உயிரிழந்த போதும் அவரது உடல் தானமாக கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe