தமிழை அழிக்க எந்த கொம்பனையும் விட மாட்டோம்- கோவையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி...

published 5 hours ago

தமிழை அழிக்க எந்த கொம்பனையும் விட மாட்டோம்- கோவையில் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி...

கோவை: கோவை ராம்நகர் பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு பூங்காவில் 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டது.இதனை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன்,

தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை, தேர்தல் நேரத்தில் மக்களை மட்டும் சந்தித்தால் போதும் மற்ற கால கட்டங்களில்,இறப்புகளுக்கு போவது போன்றவைகளை வைத்து தான் அரசியலை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

திருமதி வானதி அவர்கள் பொறுப்பெடுத்த நாளில் இருந்து இந்த சட்டமன்ற தொகுதியை முதல் நிலை சட்டமன்ற தொகுதியாக மாற்ற வேண்டும் என்கின்ற பெரு முயற்சிகளில் இறங்கி பல்வேறு திட்டங்களை தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு அரசு துறைகள் உடைய சி.எஸ்.ஆர் பண்டு போன்றவற்றை எல்லாம் கொண்டு வந்து இந்த தொகுதி மக்களுக்கு கொடுத்துக் கொண்டு இருக்கின்றார். 

கோவை மாநகரம் முழுவதும் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, மத்திய அமைச்சர்களை அழைத்து வந்து  அவர்கள் மூலமாகவும் திட்டங்களை கொண்டு வர கூடிய அளவுக்கு திறம்பட செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் வானதி.

இந்த நிகழ்ச்சிக்காக நான் வந்து இருப்பதால் இங்கு இருக்கக் கூடிய பூங்காவை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இந்த பூங்கா குழுமை நிறைந்ததாக, பசுமை நிறைந்ததாக இருக்க வேண்டும் என்பதற்காக தினம் தோறும் ஒவ்வொரு மரத்திற்கு தண்ணீர் விடுகிறோம் என்று கூறினார்கள். இந்த பார்க்கில் இன்றைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி நடக்கிறது. குறைந்தபட்சம் இங்கு இருக்கக் கூடிய மரத்தில் இருந்து விழுந்து இருக்கக் கூடிய சருகுங்கள், இலைகள் இவற்றையெல்லாம் அகற்றி கொடுக்க வேண்டும் என்று சொல்லக் கூடிய மன நிலை கூட இந்த மாநகராட்சிக்கு இல்லாதது ரொம்ப வருத்தத்திற்குரிய ஒரு விஷயம். 

இந்த நிகழ்ச்சி தனிப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கோ கட்சி சார்ந்ததோ அல்ல. இந்த பகுதியைச் சேர்ந்த அத்தனை மக்களுக்கும் பொதுவான நிகழ்ச்சி. இதுபோன்ற தவறுகளை மாநகராட்சி எதிர்காலத்தில் செய்யக் கூடாது என்பது என்னுடைய கருத்து. அது இல்லை என்று சொன்னால் அதனால், உடல் ஆரோக்கியத்திற்காக பேணப்படக் கூடிய ஒரு இடம் இந்த பூங்கா. அங்கு சுகாதாரம் மேம்படுத்தப்படவில்லை என்று சொன்னால் உடல் உபாதைகள் ஏற்படும் என்று பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.

எந்த ஒரு விஷயத்தை புதிதாகக் கொண்டு வந்தாலும் அதற்கு உரிய பயிற்சி வழங்க வேண்டும்.மாணவர்களுக்கே புதிதாக ஒரு பாடத் திட்டத்தை கொண்டு வருகிறோம் என்றால் குறைந்தபட்சம் அந்த ஆசிரியர் மூன்று வருடம் அதை கற்று தீர்த்து இருக்க வேண்டும். கல்வித் துறை அமைச்சரும் முதல்வரும் இதில் உரிய கவனம் எடுத்து, இலகுவான அணுகு முறையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில், காமராஜருடைய கால கட்டத்தில் 30 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் ஆரம்பிக்கப்பட்டது.அன்றைய கால கட்டத்தில் அரசு பள்ளியில் படிக்கக் கூடிய அத்தனை மாணவர்களுக்கும், இலவச கல்வி கொடுக்கப்பட்டது. முதல்வர் அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான கோரிக்கை, தயவு செய்து இந்த நேரத்தில் நீங்கள் கட்டாயமாக ஒன்றை செய்தாக வேண்டும், இங்கு இருக்கக் கூடிய தனியார் பள்ளிகள், அந்த பள்ளிகளை யார் ? யார் நடத்துகிறார்கள்? திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அமைச்சர்கள், சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியினுடைய பொறுப்பாளர்கள் தி.மு.க மட்டும் கிடையாது பல கட்சிகளை சேர்ந்தவர்கள் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி யார் ? யார் ? பள்ளிக் கூடம் நடத்துகிறார்கள், அந்தப் பள்ளிகளில் இந்தி மொழி கற்று கொடுக்கின்றார்களா ? இல்லையா ? இந்த விவரங்களை அவர்கள் வெளியிட வேண்டும். மொத்த அரசு பள்ளிகள் எத்தனை? அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன ?, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனை அதில் பயிலக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கை என்ன ? அரசு பள்ளிகள் மூடப்பட்டதால் எத்தனை மாணவர்களுக்கு இலவச கல்வி இல்லாமல் போனது? இன்றைய காலத்தில் தனியார் பள்ளியில் படிக்க வேண்டும் என்றால் குறைந்தபட்ச 30 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். தமிழக ஏழை குடும்பங்களை வஞ்சிக்கக் கூடிய வகையில் எதற்காக இவர்கள் தனியார் பள்ளிக் கூடங்களை கொண்டு வந்தார்கள்?. இதே பயிற்சியை ஏன் இவர்களால் அரசு பள்ளிக் கூடங்களில் செய்ய முடியவில்லை? என்னை பொருத்தவரை தமிழ் நம்முடைய உயிர். 

தமிழை ஒழிப்பதற்கு எவ்வளவு பெரிய கொம்பன் வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதே நேரத்தில் தமிழை வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று யார் ? வந்தாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறினார்.தொடர்ந்து பேசியவர், மத்திய அரசு பத்தாயிரம் கோடி நிதி தந்தாலும் அதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று முதல்வர் கூறுகிறார். அவரின் பேச்சை ஆணவ பேச்சாக நான் பார்க்கிறேன். இது முறையற்ற பேச்சாக இருக்கிறது. என்று கூறினார்.

அமித்ஷா வருகைக்கு பல்வேறு அமைப்புகள் கருப்புக்கொடி காட்ட இருப்பதாக கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்த பொன் ராதாகிருஷ்ணன்,
பரவாயில்லை அவர்களின் பாதி கருப்பு தான், என்றுமே அவர்கள் வெள்ளையை பார்த்ததே கிடையாது, என்றுமே அவர்கள் மனம் செயல் அனைத்துமே கருப்பு தான் என்று கூறினார்.

எந்த ஒரு விஷயத்தையும் தடை போட்டு நிறுத்த முடியாது, அனைவருக்கும் உணர்வு என்று இருக்கிறது, அந்த உணர்வுகளுக்கு நீங்கள் வழிவிடவில்லை என்றால் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe