அவர்களா நாங்களா என்று பார்ப்போம்- கோவையில் தமிழிசை செளந்தரராஜன் சவால்...

published 5 hours ago

அவர்களா நாங்களா என்று பார்ப்போம்- கோவையில் தமிழிசை செளந்தரராஜன் சவால்...

கோவை:  கோவை விமான நிலையம் வந்தடைந்த தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய தமிழிசை சௌந்தரராஜன் இன்றைய கால கட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி 2026 ஐ நோக்கி வெற்றிகரமாக சென்று கொண்டு இருக்கிறது  திராவிட மாடல் அரசு தோல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பதாக விமர்சித்தார். 

திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திராவிட மாடல் அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசு என்று கூறிய அவர் தற்போது அவர்கள் மொழியை வைத்து அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்றார். இங்கு எந்த அரசாங்கமும் சரியாக செயல்படவில்லை, பாலியல் பிரச்சனைகள், இன்றைய தினம் அரசு ஊழியர்கள் போராட்டம், அரசு மருத்துவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளார்கள் என்றார்.

முதல்வர் மருத்துவமும் பள்ளிக் கல்வியும் என்னுடைய இரண்டு கண்கள் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார், ஆனால் அவர் மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போடவில்லை, அவர் அரசு மருத்துவமனையை விடுத்து தனியார் மருத்துவமனையில் தான் தடுப்பூசி போட்டுக் கொள்கிறார் என தெரிவித்தார்.


முதலமைச்சர், அமைச்சர்களின் குழந்தைகள் பேரப்பிள்ளைகள் எங்கு படிக்கிறார்கள் என்று அனைவருக்குமே தெரியும் அதனால் திராவிட மாடல் அரசு இரட்டை வேடம் போட்டுக் கொண்டு இருப்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது என்றார். இவர்களுக்கு முன்மொழி தேவை, நமக்கு இருமொழியா என்று மக்களை உணர்ந்து இருக்கிறார்கள் என்றார்.

நாங்கள் இன்னொரு மொழியை திணிக்கவில்லை, இன்னொரு மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று தான் கூறுகிறோம், அதனால் இவர்கள் பாரதிய ஜனதா கட்சி தமிழ் மொழிக்கு எதிரானவர்களைப் போல கொண்டு வருகிறார்கள் என தெரிவித்தார். பாரத பிரதமர் முதற்கொண்டு தமிழ் மொழியை தான் நாங்கள் போற்றுகிறோம் என்று கூறுகிறார்கள் என்று கூறினார். 


கட்சியில் இருந்து விலகுதல், சேறுதல் எல்லாம் ஒரு கொள்கையின் அடிப்படையில், செயல்படுகிறார்கள் பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தமட்டில், உறுதி தன்மையோடு இருக்கிறது. அதனால் பா.ஜ.க வில் இருந்து அவர் விலகுகிறார். இவர் விலகுகிறார் என்று கூறிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க வின் உண்மையான கொள்கையில் இருந்து உண்மையான தொண்டர்கள் யாரும் விலக மாட்டார்கள் என்றார். உண்மையை கூற வேண்டும் என்றால் இந்த காலகட்டத்தில் மக்கள் எங்களோடு இருக்கிறார்கள். 

குழந்தைகளை வைத்து நீங்கள் நாடகம் நடத்த வேண்டாம் அரசியல் செய்யாதீர்கள் என்றார். நேரடியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு இரு மொழிக் கொள்கை என்று சொல்லாமல், விரிவு படுத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கையை கொடுங்கள் என கூறினார்.
 

ஸ்டாலினின் அமைச்சரவையில் உள்ள பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், மொழிக் கல்வியை கற்றுக் கொண்டு இருக்கிறார்கள்?. அதே போல ரயில் நிலையங்களில் சென்று இந்தியில் இருக்கும் பெயர் பலகைகளை அழிக்கிறீர்களே  வேறு மாநிலத்தவர் அந்த ரயில் நிலையத்திற்கு வந்தால் எப்படி பெயரை தெரிந்து கொள்வார்கள் ?,  என கேள்வி எழுப்பிய அவர் குறுகிய மனப்பான்மையோடு செயல்படுகிறீர்கள், அதுவே உங்களுடைய பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களில் இருக்கும் இந்தி எழுத்துக்களை அழிப்பீர்களா? என கேள்வி எழுப்பினார். 

ஒரு செங்கலை மட்டும் இல்ல செங்கோலையே நாங்கள் சட்டமன்றத்தில் நிறுவி உள்ளாம் எனக் கூறிய அவர் அதனால் நாங்களா அவர்களா என்று பார்க்கலாம் என சவால் விடுத்தார். பயப்படவில்லை என்று கூறிக்கொண்டு பயத்தோடு திரிகிறார்கள் என்பது தான் என்னுடைய கருத்து என்று கூறினார். மும்மொழிக் கொள்கையில் நடைமுறை சிக்கல் நிறைய இருக்கிறது என்று கூறுகிறார்களே என்ற கேள்விக்கு, நிர்வாக ரீதியாக ஆசிரியர்கள் அமர்த்தப்பட வேண்டும் என்றால் அமர்த்தப்பட்டு தான் ஆக வேண்டும், ஸ்டாலின் பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரமாக்குகிறேன் என்று கூறினார். இதுவரைக்கும் ஆக்கினாரா ? உங்க அரசாங்கத்திடமே ஆயிரம் ஓட்டைகள் உள்ளது  என்று கூறினார். 
 

தெலுங்கானாவிலும் இதேபோன்று மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதலமைச்சரை மக்கள் வீட்டுக்கு அனுப்பினார்கள். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்திற்கு வேண்டும் தானே, முதலில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் இருந்து வரக் கூடிய நல்ல திட்டங்களை ஏற்க மறுக்கிறீர்கள் என்றார்.மத்திய அரசின் கல்விக் கொள்கையில் கையெழுத்திட்டால் தான் நிதி ஒதுக்கப்படும் என்று கூறியது பற்றிய கேள்விக்கு, இந்தியா முழுவதும் எல்லா மாநிலத்திற்கும் இதே திட்டம் தான் செயல்படுத்தப்படுகிறது, அதனால் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவது என்று கூறுவதை முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று கூறினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe