கோவை ரயி்ல் நிலையத்தில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்- ஒடிசா நபர் கைது…

published 4 hours ago

கோவை ரயி்ல் நிலையத்தில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்- ஒடிசா நபர் கைது…

கோவை: கோவை ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசார் இணைந்து நடத்திய சோதனையில், கோர்பா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 3.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 

இதன் மதிப்பு சுமார் ரூ.1,75,000 இருக்கும் என்று தெரிகிறது.
கோர்பா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் கோவை ரயில் நிலையத்தை வந்து அடைந்த போது, ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் தேவராஜன், தலைமை காவலர்கள் மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு தலைமை காவலர்கள் ராஜு, டி.குலந்தைவேல் ஆகியோர் இணைந்து சிறப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வெள்ளை நிற பாலித்தீன் பையுடன் வந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அதில் சுமார் 3.5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கைது செய்யப்பட்ட நபர் ஒடிசாவைச் சேர்ந்த சத்யநாராயண் நாயக் (வயது 41) என்பது தெரியவந்தது. 

போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆய்வாளர் இளவழுதி, அவரைக் கைது செய்தார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe