விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம்- கோவையில் நடிகை விந்தியா பேட்டி...

published 13 hours ago

விஜய் அரசியல் செய்வது மிகவும் கடினம்- கோவையில் நடிகை விந்தியா பேட்டி...

கோவை: கோவை செஞ்சிலுவை சங்கம் அருகில் கோவை மாநகர மாவட்ட அ.தி.மு.க மகளிர் அணி சார்பில் தி.மு.க அரசை கண்டித்தும் அமைச்சர் பொன்முடி பதவி விலக வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்  கலந்து கொண்டு திமுகவிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில்  அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளரும் நடிகையுமான விந்தியா கலந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேசிய நடிகை விந்தியா,

பெண்களைப் பற்றியும், மதங்களைப் பற்றியும் இழிவாக பேசிய அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று இருக்கிறது. இன்றைய ஆளத் தெரியாத தி.மு.க ஆட்சிக் காலத்தில், பெண்கள் மட்டுமல்ல பெண்களுக்கு எதிரான எத்தனையோ . குற்றங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு சாதகமாக ஏதாவது ஒரு செய்தி கிளம்பி திசையை திருப்பி விடுகிறது. 

தி.மு.க எப்பொழுதுமே அடுத்தவர்களை குறை சொல்வதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறது. எதிர்க் கட்சிகளை மத்திய அரசை குறை சொல்வதையே நோக்கமாகக் கொண்டு இருக்கிறது. ஆனால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் மாநில கோர்ட்டும், உச்ச நீதிமன்றமும் தி.மு.க வையும், தி.மு.க அமைச்சர்களையும், காரி துப்பிக் கொண்டு இருக்கிறது.இதெல்லாம் செய்திகளில் வராத அளவுக்கு செய்திகளை மறைத்து விடுகிறார்கள்.

ஆனால் வெகு நீண்ட நாளுக்கு தி.மு.க தப்பித்து கொண்டு இருக்க முடியாது.மக்களை ஏமாற்றிய தி.மு.க வை, ஏமாற்ற மக்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

அதேபோல செந்தில் பாலாஜிக்கு பதவி வேண்டுமா ? ஜாமீன் வேண்டுமா ? என்பதை செந்தில் பாலாஜி தான் கூற வேண்டும். அவர் என்ன கூறுவார் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.

பெண்களுக்கு எதிராக பேசியதாக சவுக்கு சங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஏன் பொன்முடி மீது எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, இந்த கேள்விகளை நான் ஒவ்வொரு மேடையிலும் கேட்டுக் கொண்டு இருக்கிறேன். மக்கள் அனைவரும் ஸ்டாலினை பார்த்து கேட்க வேண்டும்,  தி.மு.க அரசை காரி துப்பும் ஊடகத்துறை மீது பாய்ந்து நடவடிக்கை எடுக்கும் காவல் துறையின் தி.மு.க அரசை சார்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை ? நீதிமன்றமே வழக்கை எடுக்க சொன்ன பிறகும் ஏன் வழக்காக பதிவு செய்யாமல் இருக்கிறார்கள்?  தைரியம் இல்லாத முதல்வர் என்று தமிழகத்தை ஆண்டு கொண்டு இருக்கிறார்.

கூட்டணிக் கட்சிகள் எல்லாம் ஆளுங்கட்சிக்கு ஜால்ராவாக போய்க் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் நெருங்க, நெருங்க நிச்சயம் பேச ஆரம்பிப்பார்கள் என தெரிவித்தார்.


அதிமுகவில்  நாங்கள் நிச்சயம் அண்ணன், தம்பியை போல தான் ஒவ்வொருவரும் பழகிக் கொண்டு இருக்கிறோம், மே தினம் கூட்டம் கூட செங்கோட்டையன் அவர்களின் தலைமையில் தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. நாங்கள் எல்லோரும் நன்றாக தான் இருக்கிறோம். தி.மு.க வின் தப்பை மறைப்பதற்காக இதுபோன்றதை  ஊதி பெரிதாக பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல நாங்கள் நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறோம் என தெரிவித்தார்.

அதேபோல சசிகலாவும் ஓ.பி.எஸ் யும் இல்லாத பலமான எதிர்கட்சியாக தான் நாங்கள் இருக்கிறோம். இது தான் அ.தி.மு.க, இதுதான் இரட்டை இலை, இது தான் இயக்கம் என்பதை நாங்கள் அனைவருக்கும் நிரூபித்து விட்டோம். பொறுப்புக்கு வந்ததற்கு பிறகு என்னுடைய செயல் அனைத்துமே செயலாக தான் இருக்கும் எப்பொழுதுமே பேச்சாக இருக்காது என தெரிவித்தார்..

நான் இன்னும் விஜயை அரசியல் தலைவராக பார்க்கவில்லை.இன்னும் விஜய் எந்த அரசியலுமே செய்யவில்லை. முதலில் அவர் அரசியல் களத்திற்கு வரட்டும், பேசட்டும் அதன் பிறகு பேசிக் கொள்ளலாம்.விஜய் எதை வேண்டுமென்றாலும் டார்கெட் செய்யலாம் ஆனால் இது சினிமா கிடையாது. இது அரசியல் மக்களின் களத்தில் நின்று அரசியல் செய்வது மிகவும் கடின,உண்மையாக நேர்மையாக இருக்க வேண்டும். நேர்மை உண்மை பொறுமை என்பது விஜய்க்கு இருக்கிறதா ? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் என நடிகை விந்தியா தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe