காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கோவை பாஜக சார்பில் அஞ்சலி...

published 1 day ago

காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கோவை பாஜக சார்பில் அஞ்சலி...

கோவை: காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். பலரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்தவர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி
சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம், கோவை மாவட்ட தலைவர் ரமேஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தி  செலுத்தினர்.  பின்னர் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஏ பி முருகானந்தம்,
காஷ்மீரில் ஏற்பட்ட சம்பவம் ஒரு துயரமான சம்பவம். பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் தீவிரவாதம் இல்லாத சூழலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். 
தற்போது பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அங்கு குவிந்து வரும் நிலையில் அதனை பொறுத்துக் கொள்ள முடியாத தீவிரவாத அமைப்புகள் இதனை செய்துள்ளது. பாகிஸ்தான் துணையோடு தீவிரவாத அமைப்புகள் இந்தியா வளர்ந்த நாடாக மாறிவிடக்கூடாது என்ற நோக்கில் இந்த தீவிரவாத செயல்களை செய்து இருக்கிறார்கள்.

இறந்திருக்கக் கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் நூறு தலைகள் உருள வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த மக்களின் கோரிக்கையாக உள்ளது. அபிநந்தன் சிறை பிடிக்கப்பட்டு இருந்த பொழுது ஒட்டுமொத்த ராணுவமே இறங்கி அவரை மீட்டு வந்ததோ அதுபோன்று எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்கின்ற வரை இந்த அரசு ஓயாது.

தமிழ்நாட்டில் திருப்பூர் கோவை பகுதிகளில் பங்களாதேஷை சார்ந்த நபர்கள் ஊடுருவி இருக்கிறார்கள் என்று தமிழக அரசுக்கு எச்சரிக்கை கொடுத்து வருகிறோம், 
காவல்துறை மெத்தனமாக இருந்து கொண்டிருக்கிறது எனவே தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும். மிகப்பெரிய சதித்திட்டத்தோடு தடை செய்யப்பட்ட அமைப்புகள் இங்கிருக்க கூடிய இயக்கங்களை உடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள் எனவே தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe