காந்திபுரத்தில் ஆவணங்கள் இல்லாத 35 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்...

published 2 weeks ago

காந்திபுரத்தில் ஆவணங்கள் இல்லாத 35 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்...

கோவை: கோவை , காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உரிய  ஆவணங்கள் இல்லாத 35 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்த காவல் துறையினர் ஒருவரை பிடித்து விசாரணை பின் வருமான வரித் துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.


கோவை, கார்ட்டூர்  காவல் துறையினர் இன்று காலை 5 மணி அளவில் காந்திபுரம் பேருந்து நிலையத்தில்  
ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு நபர் நின்று கொண்டு இருந்தார். அவரைப் பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவரது பெயர் சத்யவான் என்பது தெரியவந்தது. அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் அவரை சோதனை செய்த காவல் துறையினர் அவர் வைத்து இருந்த பையில் சோதனை மேற்கொண்ட போது செய்தித் தாள்களில் சுற்றப்பட்ட இருந்த பார்சலில் 35 லட்சம் பணம் இருப்பது தெரியவந்தது.

மேலும் அதனை  கேரளா கொண்டு செல்வதாக தெரிவித்தார்.  இதனை அடுத்து அதற்கான ஆவணங்களை கேட்ட போது உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரை காட்டூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த காவல் துறையினர் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 35,00,000 (ரூபாய் முப்பத்தைந்து லட்சம்)  பணம் மற்றும் சத்யவானை சட்ட பூர்வ நடவடிக்கைக்காக வருமான வரித்துறை புலனாய்வு அதிகாரி  (Income Tax officer Investigation)  மதி ஆனந்திடம் ஒபப்டைத்தனர்.

தற்பொழுது அவரிடம் வருமானவரித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe