கோவையில் சண்டையை விலக்க சென்ற பெண்ணின் நகைகள் மாயம்...

published 1 day ago

கோவையில் சண்டையை விலக்க சென்ற பெண்ணின் நகைகள் மாயம்...

கோவை: கோவையில் முன்விரோதத்தில் டிரைவரை அடித்து உதைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சண்டையை விலக்க முயன்ற பெண்ணின் 2 பவுன் நகை மாயமானது.
 

கோவை துடியலூர் அருகே உள்ள செங்காளிபாளையம் சிறுகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சிரஞ்சீவி(19). லோடு ஆட்டோ டிரைவர். ஒரு மாதத்திற்கு முன்பு சிரஞ்சீவி, அவரது நண்பர் வருண் ஆகியோருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரவிந்த்குமார், ஸ்ரீதர் ஆகியோருக்கும் இடையே டாஸ்மாக்கில் மது அருந்தியபோது தகராறு ஏற்பட்டது. 

இதன் பின்னர் அவர்களுக்கிடையே ஏற்பட்ட முன்விரோதத்தில் அடிக்கடி மோதிக்கொண்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் சிரஞ்சீவி செங்காளிபாளையம் ஆர்ச் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த அரவிந்த்குமாருக்கும், சிரஞ்சீவிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனையறிந்து சிரஞ்சீவியின் தந்தை, சகோதரி மற்றும் அரவிந்த்குமாரின் நண்பர் ஸ்ரீதர் உட்பட மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். .

கற்களால் தாக்கியதில் சிரஞ்சீவியின் மண்டை உடைந்தது. இந்த மோதலில் சண்டையை விலக்க முயன்ற சிரஞ்சீவியின் சகோதரி அணிந்திருந்த 2 பவுன் தங்க நகை மாயமானது. தாக்குதலில் காயமடைந்த சிரஞ்சீவியை அங்கிருந்தவர்கள் மீட்டு துடியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

இது குறித்த புகாரின் பேரில், துடியலூர் போலீசார் சிரஞ்சீவியை தாக்கிய என்ஜிஓஓ காலனியை சேர்ந்த அரவிந்த்குமார்(26) மற்றும் செங்காளிபாளையம் மேற்கு தெருவை சேர்ந்த ஸ்ரீதர்(22) ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe