கோவையில் பொது கழிவறைக்கு மூத்த தலைவர்கள் பெயர்- சர்ச்சைக்கு அடுத்து பெயர்கள் அழிக்கப்பட்டது...

published 5 hours ago

கோவையில் பொது கழிவறைக்கு மூத்த தலைவர்கள் பெயர்-  சர்ச்சைக்கு அடுத்து பெயர்கள் அழிக்கப்பட்டது...

கோவை: கோவை, மாநகராட்சி அண்ணா நகரில் சில்வர் ஜூபிலி என்ற பகுதி அருகே மாநகராட்சி சார்பில் பொதுக் கழிப்பிடம் ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்தக் கழிப்பிடத்துக்குப் புதியதாக பெயிண்ட் அடிக்கப்பட்டது.
 

புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் இந்தக் கழிப்பிடத்தின் முன்பக்கச் சுவரில், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின்  நிறுவனருமான  அண்ணாதுரையின் பெயரும், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான கக்கன் பெயரும் எழுதப்பட்டு  இருப்பது பேசு பொருளாகியது.
 

பொதுமக்கள் பயன்பாட்டுக்காக உள்ள கழிப்பிடத்துக்கு மூத்த அரசியல் தலைவர்களின் பெயர்களைச் சூட்டி இருப்பது தி.மு.க, அ.தி.மு.க மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.  


பொதுக் கழிப்பிடத்தில் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்று இருப்பது அரசியல் வட்டாரங்களில் விவாதப் பொருளாகவும் மாறிய நிலையில் இது குறித்து கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது அந்த பெயர்கள் மீது வண்ணம் பூசி அழிக்கப்பட்டுள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe