கோவை வரும் தவெக தலைவர் விஜய்- ஏற்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆனந்த்...

published 1 day ago

கோவை வரும் தவெக தலைவர் விஜய்- ஏற்பாட்டு பணிகளை ஆய்வு மேற்கொண்ட ஆனந்த்...

கோவை: கோவையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடத்தப்படும் கருத்தரங்க ஏற்பாடுகளை அக்கட்சியின் பொது செயலாளர் ஆனந்த பார்வையிட்டார்.

நிகழ்ச்சி நடைபெறும் இடம் கல்லூரி வளாகம் என்பதால் அரசியல் நிகழ்வாக இல்லாமல் வெறும் கருத்தரங்கு நிகழ்வாக மட்டுமே இருக்கும் என அக்கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத் குமார் தெரிவித்தார்.

கோவையை அடுத்த குரும்ப்பாளையம் பகுதியில் உள்ள SNS தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள அரங்கத்தில் தவெக சார்பில் கருத்தரங்கம் வரும் 26 மற்றும் 27 தேதி நடைபெறுகின்றது.

இதில் மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாவட்டங்களை சேர்ந்த பூத் கமிட்டி நிர்வாகிகள் இதில் பங்கேற்க இருக்கின்றனர்.பூத் கமிட்டி நிர்வாகிகள் தேர்தலின் பொழுது செயல்படும் விதம் குறித்த கருத்தரங்கில் அக்கட்சி தலைவர் விஜய் அறிவுரை வழங்க இருக்கின்றார்.

இந்த 
கருத்தரங்கம் நடைபெறும் அரங்கில் இன்று காலை பூஜை போடப்பட்டு  பணிகள் துவங்கியது.இந்நிலையில் இன்று பிற்பகல் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் , கோவையில் கருத்தரங்கம் நடைபெறக்கூடிய அரங்கில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டார்.

பின்னர் 
கருத்தரங்கம்  நடைபெறக்கூடிய இடத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடு பணிகளை ஆனந்த் பார்வையிட்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

கருத்தரங்கிற்கான ஏற்பாடுகள் குறித்து தவெக கோவை மாவட்ட செயலாளர் சம்பத் குமார்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தவெக மேற்கு மண்டல வாக்கு சாவடி முகவர்கள் கருத்தரங்கம் 26 மற்றும் 27 ம் தேதி நடைபெறுகின்றது எனவும்,ஈரோடு , நாமக்கல் , சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள முகவர்கள் சனிக்கிழமையும்,
கோவை ,கரூர், திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள முகவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் பங்கேற்கின்றனர் எனவும் தெரிவித்தார்.

மாலை 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை கருத்தரங்க நிகழ்வு நடைபெறும் எனவும் 
தினமும் 8000 பேர் வரை இந்த கருத்தரங்கில் பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தார்.கல்லூரி வளாகம் என்பதால் அரசியல் நிகழ்வாக இல்லாமல் கருத்தரங்கு நிகழ்வாக இருக்கும் எனவும் மாவட்ட தலைவர் சம்பத் குமார் தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe