வெங்காயத்துல இத்தனை பலன்கள் இருக்குனு தெரிஞ்சா நீங்க இனி யாரையும் "வெங்காயம்"னு திட்ட மாட்டீங்க.
வெங்காயம் நமக்கு எவ்ளோ நல்லதுனு இந்த பதிவில பாக்கலாம்...
நாம் தினந்தோறும் சமையலில் சேர்த்துக் கொள்ளும் வெங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் எனச் சொல்லப்படும் கலவைகளும் 25-க்கும் மேற்பட்ட வெவ்வேறு ஃபிளாவனாய்டுகள் எனச் சொல்லப்படும் தாவர கலவைகளும் நிறைந்ததுள்ளது.
அவை உடலை பல நோய்களிலிருந்து பாதுகாப்பதுடன் தசைகளில் ஏற்படும் அழற்சியையும் குறைக்கிறது.
வெங்காயத்தை தொடர்ந்து மற்றும் போதுமான அளவு உட்கொள்ளும் போது, இந்த கலவைகள் புற்றுநோய் மற்றும் நீரிழிவு போன்ற நாட்பட்ட நிலைகளில் இருந்தும் பாதுகாக்க உதவும்.
வெங்காயத்தில் கந்தகம் (ஸல்ஃபர்) கொண்ட சேர்மங்கள் உள்ளதால், அவை நம்மை சில வகை புற்றுநோய்களிருந்து பாதுகாப்பதாக அறிவியல் நிரூபித்துள்ளது.
வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகள் நிறைந்த உணவை உண்பவர்களுக்கு, பெருங்குடல் புற்றுநோய் உட்பட சில புற்றுநோய்களின் ஆபத்து குறைவாக இருப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நாள்பட்ட இருமல், சளி மற்றும் கண்புரை நிவாரணத்திற்கான நாட்டுப்புற மருத்துவத்தில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. வெங்காயத்தில் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகள் உள்ளதால், ஈ-கோலி, சூடோமோனாஸ், ஏருகினோசா மற்றும் ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ் (எம்ஆர்எஸ்ஏ) போன்ற நுண்ணுரிகளிக்கு எதிராக செயல்பட்டு நம் உடல் அரோக்கியத்தை காக்கிறது.
பல நாட்களாக சேமித்து வைக்கப்படும் வெங்காயத்தில் இந்த சத்துக்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறுவது குறிப்பிடத்தக்கது.
'குவெர்செடின்' என்ற வேதிபொருளை கொண்டுள்ளதின் மூலம், இதய நோயிலிருந்து காக்கும் என்று கருதப்படுகிறது. சிவப்பு வெங்காயத்தில் வெள்ளை வெங்காயத்தை விட இரண்டு மடங்கு 'குவெர்செடின்' உள்ளதால் சிவப்பு வெங்காயத்தை அதிகம் உட்கொள்வதே சிறந்ததாகும்.
வெங்காயத்தில் பூண்டில் உள்ளதை விட 14 மடங்கு 'குவெர்செடின்' உள்ளது என்பது கூடுதல் ஆச்சர்யம்.
வெங்காயம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும், கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துவதன் மூலமும், இர்த்த நாளங்களின் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சிறுகுடல், கணையம், கல்லீரல் மற்றும் எலும்புத் தசை ஆகியவற்றில் உள்ள உயிரணுக்களுடன் தொடர்புகொண்டு அதன் ஆற்றலையும் இந்த 'குவெர்செடின்' அதிகரிக்கவள்ளது.
உணவில் வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது எலும்பு அடர்த்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. இது எலும்பு தேய்மானத்தைக் குறைக்கிறது. மாதவிடாய் நிற்கப்போகும் மற்றும் மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஏற்படும் விளைவுகளைப் பற்றிய ஒரு ஆய்வில், வெங்காயத்தை அடிக்கடி உட்கொள்வது இடுப்பு எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர வயதுடைய பெண்களைப் பற்றிய மேலும் ஒரு ஆய்வு வெங்காயச் சாறு உட்கொள்வது எலும்பு இழப்பைக் குறைத்து எலும்பு அடர்த்தியை மேம்படுத்துவதாகக் காட்டியுள்ளது.
வெங்காயத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், குடல் ஆரோக்கியத்தை பராமரித்து ஜீரணமின்மையால் அவதிப்படுவோருக்கு உதவுகிறது. ப்ரீபயாடிக் நார்ச்சத்து எனக் கூறப்படும் இந்த நார்சத்து, நமது குடலில் வாழும் பாக்டீரியாக்களுக்கு எரிபொருளாகப் செயல்பட்டு அவை சீராக வேலை செய்ய பயன்படுதுகிறது.
வெங்காயம் இரைப்பை புண்களைத் தணித்து பெருங்குடல் அழற்சியையும் குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
வெங்காயத்தை உணவில் சேர்த்துக்கொள்வது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவும். வகை 1 மற்றும் 2 நீரிழிவு நோயாளிகள் பற்றிய ஒரு சிறிய ஆய்வில் 100 கிராம் பச்சை வெங்காயத்தை சாப்பிடுவது நான்கு மணி நேரத்திற்குப் பிறகு இரத்த சர்க்கரையை கணிசமாகக் குறைக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நிலைமைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த வெங்காயம், சுவாசப்பாதையின் மென்மையான தசையை தளர்த்தி, ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமாவை கட்டுப்படுத்தி நுரையீரலின் வீக்கத்தைக் குறைக்கிறது.
நம்முள் பலர் மேற்கொண்டுவரும் ஒரு பெரிய முயற்சி உடல் எடை குறைப்பு. இதிலும் வெங்காயம் நமக்கு உதவுதுங்க.
உடல் பருமனை தடுப்பதிலும் எடை அதிகரிக்காமல் நிர்வாகிகவும் வெங்காயம் உதவுகிறது. ஒரு ஆய்வு 12 வாரங்களுக்கு தினமும் 9 கிராம் வெங்காயப் பொடியை உட்கொள்வதன் மூலம் உடல் பருமன் அடைவதின் அபாயத்தைக் குறைத்து கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
இதேபோல், வேகவைத்த வெங்காயத்தில் இருந்து எடுக்கப்பட்ட சாறு, அதிக எடை கொண்டவர்களின் மொத்த உடல் கொழுப்பையும், குறிப்பாக வயிற்று உள்ளுறுப்பு கொழுப்பையும் குறைக்கிறது.
இனியும் கோபப்பட்டு "வெங்காயமே"னு திட்டுவீங்க?