தெறிக்க விடும் விஜய் கட்சியின் கொடிப்பாடல் வெளியீடு... லிங்க் உள்ளே!

published 6 months ago

தெறிக்க விடும் விஜய் கட்சியின் கொடிப்பாடல் வெளியீடு... லிங்க் உள்ளே!

கோவை: த.வெ.க.,வின் கட்சிக்கொடிக்கான பாடல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. யானைகளின் நடுவே, நட்சத்திரங்கள் சூழ வாகை மலர் இக்கொடியில் இடம்பெற்றுள்ளது.

இதனிடையே, கொடிப்பாடலும் வெளியாகியுள்ளது. சினிமா பாடலை மிஞ்சும் வகையில் வெளியான "தமிழன் கொடி" பாடல், விஜய் நேரடி அரசியலில் ஆழமாக கால் பதித்துள்ளதை அழுத்தம் திருத்தமாகக் கூறும் வகையில் அமைந்துள்ளது.

இதுகுறித்து த.வெ.க தலைவர் விஜய் கூறுகையில், "இவ்வளவு நாள் நமக்காக உழைத்தோம், இனி தமிழக மக்களுக்காக உழைப்போம்
தமிழக மக்களுக்காகவும், தமிழக வளர்ச்சிக்காகவும் உழைப்போம். கட்சி கொடிக்கு பின்னணியாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதை பின்னர் தெரிவிக்கிறேன். கொடியில் இடம்பெற்றுள்ள யானை மற்றும் வாகை மலர் பற்றிய விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன். முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

த.வெ.க உறுதி மொழிகளையும் வெளியிட்டுள்ளார். அதில்,

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து, மக்களுக்கு கடமை ஆற்றுவேன்

அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன்

⁠பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்

சாதி, மதம், பாலினம் என்ற வேற்றுமைகளைக் கடந்து, சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்போம்

என்று உறுதி மொழிகளை கூறியுள்ளார்.

பாடலை காண லிங்க்-ஐ சொடுக்கவும்: https://youtu.be/as86Klk5qUE?si=qqnazxOKVcp-WFrr
கோவைக்கான செய்திகள், அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago