கோனியம்மன் கோவில் தேர் திருவிழா- கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை- எந்தெந்த பள்ளிகள் என்ற விவரங்கள் இதோ...

published 1 week ago

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா- கோவையில் பள்ளிகளுக்கு விடுமுறை- எந்தெந்த பள்ளிகள் என்ற விவரங்கள் இதோ...

கோவை: கோவையின் காவல் தெய்வம் என்று பக்தர்களால் போற்றப்படும் கோனியம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழாவை நாளை நடைபெறுகிறது. 

இதனை முன்னிட்டு, கோவையில் உள்ள 24 பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில்,

கோனியம்மன் தேர் திருவிழாவை முன்னிட்டு, கோவை பகுதிகளில் உள்ள 24 பள்ளிகளுக்கு மார்ச் 5 - ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. ஆனால், நாளை 11 - ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது. 

அதன்படி CCMA மகளிர் மேல் நிலைப் பள்ளி (ராஜவீதி), வீராசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளி, (ராஜவீதி), புனித மைக்கேல்ஸ் மேல்நிலைப் பள்ளி, (ராஜவீதி), சௌடேஸ்வரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, SBOA மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, புனித பிரான்சிஸ் மகளிர் உயர்நிலைப் பள்ளி, புனித ஜோசப் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, புனித மேரீஸ் மேல் நிலைப் பள்ளி


புனித மைக்கேல்ஸ் மெட்ரிக் உயர் நிலைப் பள்ளி, மில்டன் மெட்ரிக் பள்ளி, ஸ்ருஷ்டி வித்யாலயா, வாசவி வித்யாலயா, மதர்லாண்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி,
T.E.LC நடுநிலைப் பள்ளி, ICC நடு நிலைப் பள்ளி,
நல்லாயன் தொடக்கப் பள்ளி,
மாநகராட்சி மகளிர் மேல் நிலைப் பள்ளி, ஒப்பணக்கார வீதி,
ஆர்.கே.ஸ்ரீ ரங்கம்மாள் மேல் நிலைப் பள்ளி,
 

மாநகராட்சி மேல் நிலைப் பள்ளி, கோவை நகரம் VH ரோடு, CSI ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மன்பவுல் உலூம் தொடக்கப் பள்ளி,
மன்பவுல் உலூம் மேல் நிலைப் பள்ளி,
பிரசண்டேஷன் கான்வென்ட் மகளிர் மேல் நிலைப் பள்ளி,
மாரன்ன கவுண்டர் உயர் நிலைப் பள்ளி ஆகிய பள்ளிக் கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த விடுமுறை அறிவிப்பானது, கோனியம்மன் தேர் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe
adsfsdfsdf
adsfsdfsdf

published 1 day ago