கோவை விமான நிலையத்தில் மார்ச் மாதம் பயணிகள் போக்குவரத்து 40 சதவீதம் அதிகரிப்பு

published 2 years ago

கோவை விமான நிலையத்தில் மார்ச் மாதம் பயணிகள் போக்குவரத்து 40 சதவீதம் அதிகரிப்பு

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :  https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் 1.8 லட்சம் பயணிகள் மற்றும் 828 டன் கார்கோ கையாளப்பட்டுள்ளதாகவும், அந்த மாதத்தில் பயணிகள் போக்குவரத்து 40 சதவீதமும்,  கார்கோ போக்குவரத்து 10 சதவீதமும் உயர்ந்துள்ளதாக விமான நிலைய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2022 மார்ச் மாதத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில், மொத்தம் 10,214 பயணிகளும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,70,436 பயணிகள் என மொத்தம் 1,80,650 பேர் பயன்படுத்தியுள்ளனர். 
கார்கோ போக்குவரத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் 85 டன், உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 743 டன் என மொத்தம் 828  டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.
கடந்த 2021 மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து 40 சதவீதம், கார்கோ போக்குவரத்து 10 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,23,664 பயணிகள் மற்றும் 749 டன் கார்கோ கையாளப்பட்டன.

இந்த தகவல் இந்திய விமான நிலைய ஆணையகம் சார்பில் அறிவிக்கப்பட்டு,  ட்விட்டர் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. கொரோனா நோய் பரவல் காரணமாக விமான போக்குவரத்து மிக கடுமையாக பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் சமீப காலமாக மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த சூழலில் கோவை விமான நிலையத்தில் அதிகாலை முதல் இரவு வரை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து பிரிவுகளை சேர்த்து தினமும் 22 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe