கோவையில் 25 பெண்களுக்கு கமல்ஹாசன் விருது வழங்குகிறார்

published 2 years ago

கோவையில் 25 பெண்களுக்கு கமல்ஹாசன் விருது வழங்குகிறார்

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மய்யத்தின் மகளிர் சாதனையாளர்கள் விருது 2022 என்ற விருதுகள் வழங்கும் விழா வருகிற 17-ம் தேதி மாலை கோவை குனியமுத்தூரிலுள்ள தனியார் ஓட்டலில் நடைபெறவிருக்கிறது.

விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நாளை (15-ந் தேதி) இரவு சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். கோவை விமான நிலையத்தில் அவருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்கவுள்ளனர்.

வரவேற்பை ஏற்றுக் கொண்டதும் கமல்ஹாசன் நேராகக் கோவையிலுள்ள தனியார் ஓட்டலுக்குச் செல்கிறார். அன்று இரவு அங்கேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

மறுநாள் 16-ம் தேதி கோவை மாவட்டத்தில் நடக்கும் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகளிலும் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ளார். தொடர்ந்து 17-ம் தேதி காலை கோவை ராஜவீதியிலுள்ள ஜவுளி வணிகர் பெண்கள் பள்ளியில் கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 17-ம் தேதி மாலை 4 மணிக்கு குனியமுத்தூரில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

விழாவில் பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகளிருக்கு விருதுகளை வழங்கி பாராட்டிப் பேசுகிறார். மொத்தம் 25 பெண்களுக்குச் சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

இதுதவிர விழாவில் கமல் கலைக்கூடம் சார்பில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். விருது வழங்கும் விழாவிற்க்கான ஏற்பாடுகள் மற்றும் கோவையில் கமல் பங்கேற்கவுள்ள கட்சி நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளையும் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் செய்து வருகின்றனர். கமல்ஹாசனின் கோவை வருகையால் பொது மக்களோடு கட்சியினரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe