ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு 10 ஆண்டு சிறை

published 2 years ago

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு 10 ஆண்டு சிறை

 

கோவை: ஈமு கோழி மோசடி வழக்கில் உரிமையாளர்கள் இருவருக்குத் தலா பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

ஈரோடு பெருந்துறையில் ஆர்.கே ஈமு கோழிப் பண்ணை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் கண்ணுசாமி, மோகனசுந்தரம். இவர்கள் ஈமு கோழி வளர்ப்பு தொடர்பாகக் கவர்ச்சியான விளம்பரங்களையும், முதலீடு திட்டங்களையும் அறிவித்தனர். இதை நம்பி 110 முதலீட்டாளர்கள் ரூபாய் 2.40 கோடி முதலீடு செய்தனர். ஆனால் உறுதியளித்தபடி முதலீட்டுத் தொகைத் திரும்பி அளிக்கப்படவில்லை. 

இது குறித்துப் பாதிக்கப்பட்ட ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஈரோடு மாவட்டம் பொருளாதார குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவையிலுள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலப் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணை முடிவில் கண்ணுசாமி, மோகனசுந்தரம் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூபாய் 1.21 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் விசாரிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டதாகவும், எனவே இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த வேண்டும் எனவும் கண்ணுசாமி, மோகனசுந்தரம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் மறு விசாரணை நடத்த உத்தரவிட்டது. 

இதன்படி மறு விசாரணை நடத்தப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. கண்ணுசாமி, மோகனசுந்தரம் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 2.42 கோடி அபராதமும் விதித்து நீதிபதி ஏ.எஸ். ரவி தீர்ப்பளித்தார். விசாரணைக்கு இருவரும் ஆஜராகாததால் அவர்களுக்குப் பிடி ஆணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe