கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் பலியானவரின் உடல் உறுப்புகள் தானம்

published 2 years ago

கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விபத்தில் பலியானவரின் உடல் உறுப்புகள் தானம்

 

கோவை: கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (சிஎம்சிஎச்) சாலை விபத்தில் உயிரிழந்த திண்டுக்கல்லைச் சேர்ந்த 43 வயது நபர் ஒருவரின் உடல் உறுப்புகள் அகற்றப்பட்டு தானம் செய்யப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள ஓட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர், கோவை மாவட்டம் தீத்திபாளையத்தில் தினக்கூலி வேலை செய்து வந்தார். அவர் ஜூலை 13-ம் தேதி சிறுவாணி சாலையில் விபத்துக்குள்ளானார். அவர் சி.எம்.சி.எச்சில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சி.எம்.சி.எச் அதிகாரிகளின் கூற்றுப்படி, அவர் சிகிச்சை பலனின்றி வியாழன் அன்று மூளைச்சாவு அடைந்தார்.

அனைத்து உறுப்புகளையும் தானம் செய்ய அவரது குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் (டிரான்ஸ்டன்) வழிகாட்டுதலின்படி வியாழக்கிழமை சி.எம்.சி.எச்-இல் அவரின் உறுப்புகள் அகற்றப்பட்டன.

டிரான்ஸ்டன் நிறுவனம் சிறுநீரகங்களை சி.எம்.சி.எச் மற்றும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கியது. இதயம் மற்றும் கல்லீரலை கோவையிலுள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கியது.

உடல் உறுப்புகளை தானம் செய்த இறந்தவரின் குடும்பத்தினருக்கு சி.எம்.சி.எச் டீன் ஏ.நிர்மலா நன்றி தெரிவித்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe