காருண்யா பல்கலை.,யில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

published 2 years ago

காருண்யா பல்கலை.,யில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

 

கோவை : காருண்யா பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழா நடைபெற்றது.

காருண்யா நிகழ்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரனின் அறுபதாவது பிறந்த நாள் விழா நிகழ்வாக மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வீல் சேர்  கூடைப்பந்து, ஆண்கள் மற்றும் பெண்கள் பாரா  வாலிபால் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது.

வீல் சேர் கூடைப்பந்து போட்டியில் சென்னை, கோவை, வேலூர், புதுச்சேரி ஆகிய அணிகளும் பாரா வாலிபால் போட்டியில் கோவை, தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். காருண்யா பேராசிரியர்களும் மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

இந்த விளையாட்டுப் போட்டியின் மூலம் தன்னம்பிக்கையுடன் விடாமுயற்சியையும் புதுப்பித்துக் கொண்டனர். நிறைவு விழாவில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு காருண்யா நிகழ்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன்  முன்னிலையில் வெற்றி பெற்ற அணியினரை வாழ்த்தி வெற்றிக் கோப்பைகள் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe