50 ஆண்டுகளுக்கு பின் இணைந்த பள்ளி நண்பர்கள் : கோவையில் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

published 2 years ago

50 ஆண்டுகளுக்கு பின் இணைந்த பள்ளி நண்பர்கள் : கோவையில் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி

கோவை : சிட்டி மாநகராட்சி பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஒன்றிணைந்து தங்களது நட்பின் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

கோவை வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ளது சிட்டி மாநகராட்சி மேல்நிலை பள்ளி. இந்த பள்ளியில் கடந்த 1971 ஆம் ஆண்டு படித்த மாணவர்கள் தற்போது சமூக வலைதளங்கள்  மூலமாக ஒன்றிணைந்து தங்களது நட்பை புதுப்பித்துக்  கொண்டனர்.

வாட்ஸ் அப்பில்   "முன்னாள் மாணவர்கள் 1971" என்கின்ற குழுவை அமைத்து அதில் தங்களது நண்பர்களை இணைத்துள்ளனர் .

இந்த நிலையில், பள்ளிப்படிப்பு முடிந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில்  51வது ஆண்டை நினைவு கூறும் வகையில் முன்னாள் மாணவர்கள் அனைவரும் இன்று சந்தித்தனர்.

இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் நீண்ட இடைவெளிக்கு பின் சந்தித்த நண்பர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி தங்களது அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து  பள்ளிக்கி நினைவு பரிசாக ஒரு பிரிண்டர் வழங்கியும், அதே பள்ளியில் தற்போது கணித ஆசிரியராக பணிபுரியும் ஆசிரியரை கௌரவித்தும் குழு  புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதுகுறித்து  அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், "நாம் எப்போதும் பழைய நண்பர்களையும் நினைவுகளையும் மறக்கக்கூடாது. நாம் நன்றாக இருக்க வேண்டும் நினைப்பவன் நண்பன் மட்டுமே. மேலும் தற்போதைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு என்பது என்ன மதிப்பில்லாத அதிக நினைவுகளை நினைவூட்டுகிறது. அது மனதிற்கு அதிக மகிழ்ச்சியை தருகின்றது" என்றார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்கள் பள்ளி நாட்களில் விளையாடிய விளையாட்டுக்கள், படித்த நினைவுகள் கூறி சிரித்து மகிழ்ந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe