கோவையில் அதிக வட்டி வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி: இளம்பெண் மீது வழக்கு

published 2 years ago

கோவையில் அதிக வட்டி வாங்கி தருவதாக வாலிபரிடம் ரூ.36 லட்சம் மோசடி: இளம்பெண் மீது வழக்கு

 

கோவை: கோவை நீலிக்கோணம்பாளையத்தைச் சேர்ந்தவர் சூர்யபிரகாஷ் (வயது 32) . இவருக்குக் கோவை பாப்பநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ரேணுபிரியா (24) என்பவர் அறிமுகமானார்.

அப்போது ரேணுபிரியா எனக்குத் தெரிந்த ஒருவர் திருப்பூரில் மிகப்பெரிய அளவில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். அவரிடம் பணம் கொடுத்தால், தொகைக்கு ஏற்ப அதிக வட்டி வாங்கி தருவதாகத் தெரிவித்தார்.

இதை நம்பிய சூரியபிரகாஷ் வெவ்வேறு கட்டங்களாக ரேணுபிரியாவின் வங்கிக் கணக்கிற்கு ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலமாக ரூ.36 லட்சம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆனால், ரேணுபிரியா கூறியபடி வட்டித் தொகையை வாங்கி கொடுக்கவில்லை. அசலையும் திருப்பி கொடுக்காமலிருந்து வந்தார்.

இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சூர்யபிரகாஷ், ரேஸ்கோர்ஸ் போலீசில், ரேணுபிரியா மீது புகார் அளித்தார். காவல்துறையினர் நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ரேணுபிரியா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe