ஸ்டஃப்டு பாகற்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? | Stuffed Bitter gourd

published 2 years ago

ஸ்டஃப்டு பாகற்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? | Stuffed Bitter gourd

 

பாகற்காய் என்ற உடனே நம் நினைவுக்கு வருவது அதன் கசப்பு சுவை தான். கசப்பாக இருந்தாலும் பாகற்காயின் நன்மைகள எண்ணற்றவை. இந்த ஆரோக்கியமான காயைக் கசப்பில்லாமல் செய்து சாப்பிட ஒரு சுவையான செய்முறை இதோ...

தேவையான பொருட்கள்:

  • நடுத்தர அளவுப் பாகற்காய்- 5
  • வெங்காயம்- 1
  • சீரகம்- 1 தேக்கரண்டி
  • கடுகு- 1/2 தேக்கரண்டி
  • கருவேப்பிலை- 1 கொத்து
  • பூண்டு- 6 பல்
  • மிளகாய்த்தூள்- 1 தேக்கரண்டி
  • புளி- சிறிய துண்டு
  • கடலைமாவு- 2 தேக்கரண்டி
  • மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
  • தேங்காய் எண்ணெய்- 4 கரண்டி
  • உப்பு- தேவையான அளவு

செய்முறை:

  • பாகற்காயை நன்கு கழுவி, இரண்டாக வகுத்து விதைகளை அகற்றி விடவும்.
  • உள்பகுதியில் லேசாக உப்புத் தடவி அரை மணி நேரம் கழித்து நன்றாக கழுவி சுத்தம் செய்துவிடவும். இவ்வாறு செய்தால் கசப்பு நீங்கிவிடும்.
  • வெங்காயத்தை சிறுது சிறிதாக வெட்டி விடவும்.
  • வாணலியில் எண்ணெய் ஊரற்றி கடுகு, சீரகம், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றைப் போட்டுத் தாளித்துக் கொள்ளவும்.
  • வெங்காயம், பூண்டு, உப்பு போட்டு வதக்கிக் கொள்ளவும்.
  • வெங்காயம் பொன்னிறமானதும் புளியைத் தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
  • பின் கடலை மாவு, மிளகாய்த் தூள் போட்டு நன்றாக கிளறி கொத்தமல்லி தழையைப் போட்டு இறக்கி ஆரவைத்துக் கொள்ளவும்.
  • இந்தக் கலவையைப் பாகற்காயிற்கு உள்ளே வைத்து நூலால் தனித்தனியாக கட்டிக் கொள்ளவும்.
  • வாணலியை மிதமான தீயில் வைத்து மீதமுள்ள எண்ணெயை ஊற்றி அதில் பாகற்காயைப் போட்டு வேக வைக்கவும்.

(குறிப்பு: இது 15 நிமிடங்கள் வேக வேண்டும். மூன்று நிமிடத்திற்கு ஒரு முறைப் பாகற்காய்களைத் திருப்பிவிட வேண்டும்.)

  • பச்சை நிறம் மங்கி வந்ததும் இறக்கவும்.

சுவையான, வித்தியாசமான ஈவினிங்க் ஸ்நாக்ஸ் தயார்...

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe