முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடத்த முதல்வர் வலியுறுத்தல்: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

published 2 years ago

முன்னாள் மாணவர்கள் கூட்டம் நடத்த முதல்வர் வலியுறுத்தல்: கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் தகவல்

 

கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்யூனிகேஷன் மற்றும் மீடியா துறை சார்பில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் பேசியதாவது: 

"முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டங்கள் நடத்துவது மிகவும் ஆரோக்கியமானது. இது துறை சார்ந்த வேலைவாய்ப்பு குறித்துத் தெரிந்துகொள்ள உதவும். இந்த வருடம் நடந்த துணைவேந்தர்கள் கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்புக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

தற்போது அனைத்து வகையான டெக்னாலஜிகளும் வேகமாக வளர்ந்து வருகிறது. மீடியாத் துறை மாணவர்கள் வளர்ந்து வரும் டெக்னாலஜிகளுக்கு ஏற்பத் தங்களின் திறன்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், பாரதியார் பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களின் திறனை மேம்படுத்தத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது மாணவர்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்குப் பயன்படும்." என்றார்.

இதில், பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ், பதிவாளர் முருகவேல், பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்கள் சரவணகுமார், ஜெயச்சந்திரன், பேராசிரியர் தாமஸ், துறைத் தலைவர் ஹரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe