போத்தனூா் வழியாக இயக்கப்படும் டாடா நகா்- எா்ணாகுளம் விரைவு ரயில் ரத்து

published 2 years ago

போத்தனூா் வழியாக இயக்கப்படும் டாடா நகா்- எா்ணாகுளம் விரைவு ரயில் ரத்து

 

கோவை: ரயில்வே தண்டவாளத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாகப் போத்தனூா் வழியாக இயக்கப்படும் டாடா நகா்- எா்ணாகுளம் விரைவு ரயில் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

"ஒடிசா மாநிலம், சாம்பல்பூா் ரயில்வே கோட்டம் தியோபாகல்- பாா்பலி இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால் நாளை 25-ஆம் தேதி மற்றும் 29-ஆம் தேதிகளில் டாடா நகரிலிருந்து புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக எா்ணாகுளம் செல்லும் டாடா நகா்- எா்ணாகுளம் விரைவு ரயில் (எண்: 18189) ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று எா்ணாகுளம்- டாடா நகா் விரைவு ரயில் (எண்:18190) 28-ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது."

 இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe