கோவையில் காந்தி ஜெயந்தியன்று மதுவிற்பனை ஜோர் : 36 பேர் கைது

published 2 years ago

கோவையில் காந்தி ஜெயந்தியன்று மதுவிற்பனை ஜோர் : 36 பேர் கைது

கோவை: கோவையில் காந்தி ஜெயந்தி தினத்தில் மதுவிற்பனையில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனை பயன்படுத்தி சிலா் மது பாட்டில்களைப் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன்பேரில் பீளமேடு, போத்தனூா், சிங்காநல்லூா், சரவணம்பட்டி மற்றும் மதுவிலக்கு அமலாக்க துறை, புறநகர் போலீசார் ஆகியோர் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், தடையை மீறி மாநகரில் மது விற்ற 16 பேரும், புறநகரில் 20 பேரையும் கைது செய்தனர். போலீஸாா் அவா்களிடம் இருந்து 734 மது பாட்டில்கள், மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனா்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe