ஊட்டி பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

published 2 years ago

ஊட்டி பந்தலூர் அருகே சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை மீட்பு

 

கோவை: நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகா சேரம்பாடி வனச் சரகத்துக்கு உள்பட்ட அத்திச்சால் பகுதியிலுள்ள தனியார் காபித் தோட்டத்தில் சுருக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிருக்குப் போராடி வருவதாக வனத் துறையினருக்குச் சனிக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சேரம்பாடி வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சிறுத்தையை மீட்க முயன்றனர். ஆனால், சிறுத்தை ஆக்ரோஷமாகச் சீறிப் பாய்ந்ததால் முதுமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமாரை வரவழைத்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை மீட்டனர்.

பின்னர், காயமடைந்த சிறுத்தை முதுமலை புலிகள் காப்பகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, மருத்துவக் குழுவால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், சுருக்கு கம்பி வைத்த தோட்ட உரிமையாளர் மாத்யூ (69) தலைமறைவானதால், உடனிருந்த அவரது உறவினர் அனீஷ் (39) என்பவரை வனத் துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe