ஆனைகட்டியில் ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்த.. மக்கள் பீதி..!

published 2 years ago

ஆனைகட்டியில் ஆடுகளை கடித்து கொன்ற சிறுத்த.. மக்கள் பீதி..!

கோவை: கோவை மாவட்டம் ஆனைகட்டியை அடுத்துள்ள காளையனூரை சேர்ந்தவர் விஜயன் (63).அவருக்கு சொந்தமான தோட்டத்தில் ஆடு, மாடுகள்,கோழிகள் என வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் காலை வழக்கம் போல் விஜயன் அவரது தோட்டத்திற்கு சென்று பார்த்தபோது இரண்டு ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அக்கம் பக்கத்து தோட்டத்தினர் மற்றும் பொதுமக்கள் கூடினர்.

தகவலின் பேரில் அங்கு வந்த வனத்துறையினர், சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஆடு கழுத்தை கடித்த பல் தடம் மற்றும் அப்பகுதியில் பதிவான கால் தடங்களை ஆய்வு செய்த போது, அது சிறுத்தையின் கால் தடம் என்பதை உறுதி செய்தனர்.

மேலும் இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று வனத்தை விட்டு வெளியில் வந்து தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த ஆடுகளை அடித்து கொன்று வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனால் பொதுமக்கள் இரவு நேரத்தில் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளதால், உடனடியாக வனத்துறையினர் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க  கோரிக்கை விடுத்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe