கோவையின் 5 சிறந்த சைவ உணவகங்கள்

published 2 years ago

கோவையின் 5 சிறந்த சைவ உணவகங்கள்

 

சுவையான உணவு என்றதுமே பலரின் நினைவுக்கு வருவது அசைவ உணவு தான். எனினும் சைவ உணவிலும் அசைவ உணவிற்கு இணையான பல சுவையான உணவுகள் உள்ளன என உணர்ந்தவர்களும் உணர விரும்புவோருக்குமான ஒரு செய்தி தொகுப்பே இது. கோவை மாநகரின் சிறந்த சைவ உணவகங்களை இங்கே காண்போம்.

யாரி

சாய் பாபா காலனியில், பாரதி பார்க் 6வது தெருவில் இருக்கும் இந்த உணவகம் குடும்பத்தாரோடும், நண்பர்களோடும் செல்ல ஒரு சிறந்த சூழல், மெல்லிய இசை, அழகான அலங்காரங்களைக் கொண்டது. வட இந்திய உணவு வகைகள், சாட் வகைகள், சைனீஸ் உணவு மற்றும் இனிப்பு, ஐஸ் க்ரீம் வகைகள் பலவற்றை இங்கே கிடைக்கின்றன. இருவர் உண்பதற்கு சுமார் ரூ. 700 வரை செலவாகும். இங்கே பார்டீக்காக முழு ஃப்லோரை புக் செய்யும் வசதியும் உள்ளது. 

 

கைலாஷ் பர்பத்

1950களில் முல்சந்தனி சகோதரர்களால் தொடங்கப்பட்ட கைலாஷ் பர்பத், பாரம்பரிய சைவ, வட இந்திய மற்றும் சிந்தி உணவு வகைகளுக்கான இந்திய உணவகங்களில் மிகவும் பிரபலமான பிராண்டாகும். ப்ரூக் ஃபீல்ட்ஸின் தரை தளத்தில் உள்ளது இந்த உணவகம். இருவர் உண்பதற்கு சுமார் ரூ. 400 வரை செலவாகும். காசுக்கு ஏற்ற தரத்தைக் கொடுக்கும் உணவகம் என்று பலராலும் பாராட்டப்படுவது இவர்களின் சிறப்பு.

 

ஃபோர் கப் ஃப்யூஷன் வெஜ் டைனிங்

ஆர் எஸ் புரம், டி வீ சுவாமி ரோடில் அமைந்துள்ளது இவ்வுணவகம். வட இந்திய மற்றும் சைனீஸ் உணவு வகைகளுக்குப் பெயர் பெற்ற இந்த இடத்தில் 'ராஜபோகம் மீல்ஸ்' மிகவும் பிரபலம். வெவ்வேறு நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் கலாச்சாரங்களிலிருந்து உருவாகும் வெவ்வேறு சமையல் மரபுகளின் கூறுகளை ஒருங்கிணைக்கும் உணவுகளை பரிமாறுவது இவர்களின் சிறப்பு. இருவர் உண்பதற்கு சுமார் ரூ. 1000 வரை செலவாகும்.

 

கிரீம் சென்டர்

ரேஸ் கோர்ஸில் பிஷப் அப்பாசாமி கல்லூரிக்கு எதிரில் உள்ளது இவ்வுணவகம். வட இந்திய உணவு வகைகள், சாட் வகைகள் மற்றும் சைனீஸ் உணவுகளுடன், இத்தாலியன் மற்றும் மெக்சிகன் உணவிர்க்கும் பெயர் பெற்றது. இருவர் உண்பதற்கு சுமார் ரூ. 1000 வரை செலவாகும் இந்த உணவகத்தில் சனி, ஞாயிறுகளில் புக் செய்யாமல் இடம் கிடைப்பது கடினம். 

 

ஆல் சீசன்ஸ்

சாய் பாபா காலனி, என். எஸ். ஆர் ரோடில் அமைந்துள்ள இவ்விடம் ஆசிய வகை உணவுகள் அனைத்தையும் பரிமாறுகிறது. இருவர் உண்பதற்கு சுமார் ரூ. 500 வரை செலவாகும். 'வீகன்' என்று சொல்லப்படும் இறைச்சி மற்றும் பால், தயிர், வெண்ணெய், பன்னீர் போன்ற விலங்கு பொருட்களைச் சாப்பிடுவதைத் தவிர்ப்போர்க்கான சிறந்த தேர்வு இவ்வுணவகம்.

 

இந்த வீக் எண்ட் இந்த ஹோட்டல்-ஸ விசிட் பண்ண ரெடி ஆகிட்டீங்கலா...?!

கோவையின் சிறந்த அசைவ உணவகங்கள் https://newsclouds.in/news/1568/Best_non-veg_restaurants_in_Coimbatore

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe