கோவையில் சபரிமலை- மகிழ்ச்சியில் பக்தர்கள்...

published 6 days ago

கோவையில் சபரிமலை- மகிழ்ச்சியில் பக்தர்கள்...

கோவை: கோவை அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பால் கம்பெனி கிளை சார்பாக 12"ஆம்  ஆண்டு ஐயப்பன் தேச விளக்கு பூஜை மற்றும் அன்னதான பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு பெருவிழா கடந்த 27'ஆம் தேதி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சியுடன்  துவங்கியது.

நிகழ்வில்  சபரிமலை முன்னாள் மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி தலைமையில் ஐயப்பனுக்கு படி பூஜை, மற்றும் ஸ்ரீ கோவில் பூஜை செய்யப்பட்டது.

இது குறித்து ஐயப்பன் சேவா சங்க  நிர்வாகிகள் கூறியதாவது

12 ஆண்டுகளாக  இங்கே சிறப்பான முறையில் வழிபாடுகள் நடத்தப்படுகிறத இந்த முறை சபரிமலை போலவே - 18 படிகளை அமைத்து  கோவில் ஏழுப்பி   ஐயப்பனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தபடுகிறது எனவும்

மனிதநேயத்தை சொல்லி தரும் வழிபாடுகளில் ஐயப்பன் முக்கியதுவம் பெறுகிறார் எனவும் இவ்வாறு தெரிவித்தனர்..

தரிசனத்தை தொடர்ந்து  ஐயப்ப தேச விளக்கு தேரோட்டம் திருவீதி உலா ஆர்.எஸ்.புரம் லாலிரோடு பெரிய மாரியம்மன் கோவிலின் முன்பாக பட்டாசுகள் வாண வேடிக்கையுடன் துவங்கியது.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு  கையில் விளக்கை ஏந்தியபடி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமியின் ரதத்தின் முன்பாக நாதஸ்வரம், உடுக்குப்பாட்டு, தாலபொலி, சிங்காரி மேளம், தையம், பூக்காவடி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe