ஒரு கையில் சிலம்பம், ஒரு கையில் சைக்கிள்- உலக சாதனையில் கோவை மாணவர்கள்...

published 3 days ago

ஒரு கையில் சிலம்பம், ஒரு கையில் சைக்கிள்- உலக சாதனையில் கோவை மாணவர்கள்...

கோவை: நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் ஒருங்கிணைப்பில், கௌமார மடாலயத்துடன் இணைந்து வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், 73 பேர் பங்கேற்று 1 மணி நேரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுழற்றும் வியத்தகு உலக சாதனை நிகழ்வு கோவை சின்னவேடம்பட்டி, கௌமார மடாலயம், TRA பள்ளி மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில், கலைமணி. குருநாதர் சித்தர் துரைசாமி, பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவரும் திரைத்துறை ஸ்டன்ட் இயக்குனருமான கிராண்ட் மாஸ்டர் பவர். எஸ். பாண்டியன் ஆசான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவரும் தலைமை பயிற்சியாளருமான திலீப் குமார் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார்.

இந்த பிரம்மாண்ட நிகழ்வில், வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த  3 வயது மாணவர்கள் முதல், 73 பேர் பங்கேற்று தொடர்ந்து ஒரு மணி நேரம் இடைவிடாது சைக்கிள் ஓட்டிக்கொண்டே இரு கைகளிலும் மாற்றி மாற்றி சிலம்பம் சுழற்றி பார்ப்போரை பிரம்மிப்பில் ஆழ்த்தினர். பெற்றோர்கள் மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.

*கிராண்ட் மாஸ்டர் பவர். எஸ். பாண்டியன் ஆசான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,* சிலம்பக் கலையின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார். இதுவரையில், சிலம்பக் கலைக்கான தேசிய அங்கீகாரம் கிடைக்காத நிலையில், இத்தகைய உலக சாதனை நிகழ்வுகள் சிலம்பக்கலைக்கு தேசிய அங்கீகாரம் பெற்றுத்தர உதவும் என்றும் அவர் கூறினார். மேலும், வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவரும் தலைமை பயிற்சியாளருமான திலீப் குமாருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்ததோடு மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

*வி.ஆர். சிலம்பம் ஸ்போர்ட்ஸ் அகாடமியின் தலைவரும் தலைமை பயிற்சியாளருமான Dr. திலீப் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,* தனது ஆசானான, பவர். எஸ். பாண்டியன் ஆசான் பல்வேறு வழிகளில் தனக்கு வழிகாட்டியாக கூறினார். மேலும், இதுவரை பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்திருப்பதாகவும் தற்போது, 73 மாணவர்கள் பங்கேற்று சைக்கிள் ஓட்டிக்கொண்டே சிலம்பம் சுழற்றும் உலக சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதாகவும் கூறினார். குறிப்பாக, இந்த உலக சாதனை நிகழ்வில் 03 வயது முதலான மாணவர்கள் பங்கேற்றதாகவும் குறிப்பிட்டார். மேலும், பெற்றோர்கள் இதற்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாகவும் கூறி அவர்களுக்கு தனது நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்நிகழ்வின் இறுதியில், உலக சாதனை நிகழ்த்தியதற்காக, நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் உலக சாதனை சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DEt5WNBPUZ8/?igsh=MWRsa3BvbHF1ZzBuNQ==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe