கோவையின் சிறந்த அசைவ உணவகங்கள்

published 2 years ago

கோவையின் சிறந்த அசைவ உணவகங்கள்

நமது நியூஸ்க்ளவுட்ஸ் தளத்தில் கோவையின் 5 சிறந்த சைவ உணவகங்கள் தொடர்பான செய்தி வெளியிடப்பட்டது.  https://newsclouds.in/news/1325/Kovai's_top_five_veg_restaurants-best_veg_restaurants 

இந்த பதிவைத் தொடர்ந்து வாசகர்கள் சிறந்த அசைவ உணவகங்களின் தொகுப்பை வெளியிடக்கோரினர். இந்த நிலையில் கோவையில் உள்ள சிறந்த அசைவ உணவகங்களின் பட்டியலை இங்கு தொகுத்துள்ளோம். உங்கள் விருப்பமான உணவகத்தை கமெண்டில் எங்களுக்கும், கோவை மக்களுக்கும் கூறலாம். 

இன்றைய மதிய உணவை எங்கே சென்று சாப்பிடலாம்-னு இதை படிச்சுட்டு முடிவு பண்ணுங்க...

பலதரப்பட்ட உணவுகளை ருசித்தாலும், ரசித்தாலும் நம் வாழ்க்கையிலிருந்து பிரியாணி என்ற உணவை அகற்றுவதற்குத் தகுதியான ஒரு உணவை மட்டும் நாம் இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை. பிரியாணி ஒரு உணவு என்பதைத் தாண்டி அதை ஒரு உணர்ச்சியாகவே கருதுவோர் நம்முள் பலர்.  கோயம்புத்தூர்-ல பல ஹோட்டல்கள் வளர்ந்து வந்தாலும் நம்மை ஆட்கொண்டது சில உணவகங்களே... அவற்றுள் சில இதோ... 

ஜூனியர் குப்பண்ணா

கோயம்புத்தூரில் உள்ள சிறந்த அசைவ உணவகங்களில் ஒன்று, பல வருடங்களாக, பல தலைமுறைகளாக உண்மையான அசைவ உணவைப் பொதுமக்களுக்கு வழங்குவதில் அனுபவம் வாய்ந்தது ஜூனியர் குப்பண்ணா. பல ஆண்டுகளாக, சுவை மாறாமல், ஆட்டிறைச்சி, நல்லி சாப்ஸ் போன்ற சிறந்த உணவுகளை, மென்மையான இறைச்சியைக் கவனமாகத் தேர்ந்தெடுத்து, வேகவைத்து முழுமையான சுவையோடு வழங்குவதில் ஜூனியர் குப்பண்ணா-விற்கு நிகர் ஜூனியர் குப்பண்ணா தான். கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள இந்த உணவகத்தில் இருவர் உண்ண ₹.750-₹.1,000 வரை ஆகும். காலை 11 முதல் இரவு 10:45 வரை இந்த உணவகம் செயல்படுகிறது.

 

வளர்மதி ஹோட்டல் (கொங்குநாடு சமையல்)

தமிழ்நாட்டின் கிராமப்புறங்களில் இன்னும் தயாரிக்கப்படும் விதத்தில் பாரம்பரிய இறைச்சி உணவுகளைத் தயாரிக்கும் பழமையான உணவகம் இது. பாரம்பரிய கொங்குநாட்டு சுவையின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தக் குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உணவுகளுள் நம் விருப்பத்திற்கேற்ப தேர்ந்தெடுத்து உண்ணலாம். நாட்டுக் கோழி வறுவல் மற்றும் நெய் பரோட்டா இவர்களோடு சிக்னேச்சர் டிஷ் என்று சொல்லலாம். மற்ற அசைவ உணவகங்களின் கட்டணத்தை ஒப்பிடுகையில் இங்கு விலை மிகவும் குறைவு, ₹.500-₹.750-ற்குள் இருவர் சாப்பிடலாம். ரேஸ் கோர்ஸ் ரோடு, ஆர். கே புகைப்பட மையம் அருகிலுள்ள இந்த உணவகம் மதியம் 12.00-4.00 மற்றும் இரவு 7.00-11.00 வரை செயல்படுகிறது.

 

ஹரிபவனம்

கோயம்புத்தூரில் உள்ள உள்ளூர் வாசிகளின் சிறந்த அசைவ உணவகங்களின் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது ஹரிபவனம். பார்க்கிங் சச்சரவுகளில் ஏதுமின்றி, முன்பக்கத்தில் ஏராளமான பார்க்கிங் இடத்துடன் அமைந்திருக்கிறது இந்த உணவகம். இங்குள்ள மெனுவிலுள்ள ஒவ்வொரு உணவிற்கும் தனித்த அங்கீகாரமும் குறிப்பிடுதலும் தேவைப்படுவதால், இங்கு பரிமாறப்படும் எந்த ஒரு உணவையும் தனித்துச் சிறந்தது எனத் தேர்ந்தெடுக்க முடியாது. பீளமேடு பாரதி காலனி சாலையில் அமைந்துள்ள இந்த உணவகம் பகல் 11:45- 4.00 மற்றும் இரவு 7.00-10:30 மணி வரை செயல்படுகிறது. இங்கு இருவர் உண்ண சுமார் ₹.750-₹.1,000 வரை செலவாகும்.

ஸ்ரீ சூர்யா

இந்தத் துறையில் இது ஒரு புதிய நுழைவு என்றாலும் தரம் மற்றும் அளவு அடிப்படையில் அதன் சகாக்களை விட முன்னோங்கியுள்ளது ஸ்ரீ சூர்யா ஹோட்டல். எந்த செயற்கையான சுவை மேம்பாட்டுப் பொருட்களும் இல்லாத உணவுகளை மட்டுமே வழங்குவதாக உறுதியளிக்கிறது ஸ்ரீ சூர்யா. உணவின் இயற்கையான சுவையைக் கருத்தில் கொண்டு, சுவைக்கான பூஸ்டர்களோ அளவிற்கு அதிகமான எண்ணெய்யோ இல்லாமல் தயாரிக்கப்படுகின்றன இங்குள்ள உணவுகள். இங்கு கிடைக்கும் நாட்டுக் கோழி பொரியலுக்குக் கிராக்கி மிக அதிகம். 

வயிறு நிரம்பச் சாப்பிட விரும்புவோருக்குச் சிறந்த சாய்ஸ் இந்த உணவகம்.  இருவர் உண்ண சுமார் ₹.750-₹.1,000 வரை செலவாகும் இந்த ஹோட்டல் கவுண்டம்பாளையம், சேரன் நகரில் அமைந்துள்ளது. காலை 11:30 முதல் இரவு 10:45 வரை செயல்படுகிறது ஸ்ரீ சூர்யா.

 

கொக்கரக்கோ

நம் அனைத்து சிக்கன் ஆசைகளுக்கான ஒரே தீர்வு கொக்கரக்கோ. பிரியாணியாக இருந்தாலும் சரி அல்லது சிக்கன் கிரில்லாக இருந்தாலும் சரி, இவர்களின் சுவை நிகரற்றது என்றே கூறலாம். நாம் இன்னும் சுவைத்துப் பார்க்க நிறைய உணவு வகைகள் உள்ளன. உங்கள் குடும்பத்தினருடன் இரவு உணவிற்குச் செல்ல ஏற்ற சூழல் கொண்டது இந்த உணவகம். ஆர். எஸ் புரம், டி வி  சுவாமி சாலை மேற்கில் அமைத்திருக்கும் இந்த உணவகம் மதியம் 12.00 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்படுகிறது. இந்த உணவகத்தில் இருவர் உண்ண ₹.500-₹.750 வரை ஆகும்.

 

பார்பிக்யூ நேஷன்

உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் ஆடம்பரமான இரவு பார்ட்டி அல்லது டின்னர் மீட்டோ நடத்த திட்டமிட்டுள்ளீர்களா? யோசிக்காமல் தேர்ந்தெடுக்க சிறந்த இடம் பார்பெக்யூ நேஷன். எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த உணவகம் அதன் விருந்தினர்களுக்கு அனைத்து உணவு வகைகளையும் தாராளமாக வழங்குகிறது. கேக்குடன் பிறந்த நாளைக் கொண்டாட இங்கு கேக், டேபிள் ஆகியவற்றை முன்கூட்டியே முன்பதிவு செய்யலாம். 

இங்கு உணவுடன் மதுபானங்களும் பரிமாறப்படுகிறது. இருவருக்கு ₹.1500-₹2,000 வரை செலவாகும் இந்த ஹோட்டல் டவுன்ஹால், மெட்ரோ பார்க் இன் ஹோட்டலில் அமைந்துள்ளது. மதியங்களில் 12.00-3:30 வரையிலும் இரவு 7.00-10:30 மனி வரையும் செயல்படுகிறது. இங்கு கூட்டம் அதிகம் வருவதால் டேபிளை முன்பதிவு செய்து செல்வது நல்லது. 

 

திண்டுக்கல் வேணு பிரியாணி

நீங்கள் பிரியாணி உண்ண விரும்புகிறீர்களானால், நகரத்தின் மிகச் சிறந்த பிரியாணியை அனுபவிக்க திண்டுக்கல் வேணுவிற்கு நேராகச் செல்லுங்கள். இது காரமான, சுவையான பிரியாணியை ருசிக்க ஏற்ற இடமாகும். நகரின் மையப் பகுதியான காந்திபுரத்தில் அமைந்துள்ள இந்த உணவகம் காலை 10 - இரவு 11 மணி வரை செயல்படுகிறது. இருப்பிடத்தையும் சுவையையும் கருத்தில் கொண்டு விலை சற்று கூடுதலாக இருப்பதால் இங்கு இருவர் உண்ண ₹.1,000-₹.1,250 வரை செலவாகும்.

 

கோவை மக்களே முடிவு பண்ணிட்டீங்களா இன்னிக்கு மதிய உணவு எங்க-னு... கையோட உங்கள் நண்பர்களுக்கும்  இந்த பதிவை பகிர்ந்திடுங்க.. 

கோவையின் 5 சிறந்த சைவ உணவகங்கள் https://newsclouds.in/news/1325/Kovai's_top_five_veg_restaurants-best_veg_restaurants

-

நியூஸ் க்ளவுட்ஸ் குழு

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe