பயணிகளின் கனிவான கவனத்திற்கு: கோவையில் அலைமோதும் கூட்டம்!

published 4 days ago

பயணிகளின் கனிவான கவனத்திற்கு: கோவையில் அலைமோதும் கூட்டம்!

கோவை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்வதற்காக கோவையில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் பேருந்து நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது.

தொழில் நகரான கோவையில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும், இங்கு கல்லூரிகள் அதிகம் இருபதால் வெளியூரைச் சேர்ந்த மாணவர்கள் கோவையில் தங்கிப் படித்து வருகின்றனர். தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் வசித்து வருவோர் தங்கள் சொந்த ஊர் நோக்கிப் புறப்பட்டு வருகின்றனர்.

இதனால் கோவை மத்திய ரயில் நிலையம், வடகோவை, போத்தனூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. அதே போல், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி பேருந்து நிலையங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இப்பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போதுமான அளவில் இல்லை என்பதால் நெரிசல் அதிகரித்துள்ளது.

சிங்காநல்லூரில் சரியான சாலை வசதி இல்லாததால், மாலை நேரத்தில் பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து வருகிறது. குறிப்பாக மாலை நேரங்களில் மேற்கூறிய அனைத்து பகுதிகளும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

எனவே, சிங்காநல்லூர், அவினாசி சாலை மார்க்கமாகச் செல்வோர் முன்கூட்டியே தங்களது பயணத்தைத் திட்டமிடக் கேட்டுக்கொள்ள நியூஸ் க்ளவுட்ஸ் கேட்டுக்கொள்கிறது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் 44,600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும். பண்டிகை முடிந்து மக்கள் ஊர் திரும்ப வசதியாக 22,676 பேருந்துகள் இயக்கப்படும்  என்றும் அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe