காந்திபுரத்தில் கைவரிசை; நிதானமாக பைக்கை திருடிச்செல்லும் நபர் - வீடியோ உள்ளே

published 1 day ago

காந்திபுரத்தில் கைவரிசை; நிதானமாக பைக்கை திருடிச்செல்லும் நபர் - வீடியோ உள்ளே

கோவை, காந்திபுரம் ராம்நகர் பகுதியில் காளியப்பன் லேஅவுட் பகுதியைச் சேர்ந்த அஜித் என்பவர். டிரான்ஸ்போர்ட் அலுவலகத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.

நேற்று இரவு அவர் தங்கி இருக்கும் வீட்டிற்கு முன்பு (பல்சர் 200) இருசக்கர வாகனத்தை நிறுத்தி உள்ளார். அதிகாலை 4 மணி அளவில் அங்கு வந்த மர்ம நபர் அந்த இருசக்கர வாகனத்தின் அருகில் நின்று நோட்டமிட்டார்.

பிறகு, நிதானமாக வாகனத்தில் இருந்த ஒயர்களை அறுத்து விட்டு, வாகனத்தில் மேலே அமர்ந்து காலால் உதைத்து லாக்கை உடைத்து பைக்கை திருடிச் சென்றார்.

காலை எழுந்த மனோஜ் வீட்டிற்கு வெளியே சென்று பார்த்தார். அப்போது அங்கு பைக் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் வாகனத்தை திருடிச் சன்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து அவர் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற மர்ம நம்பரை தேடி வருகின்றனர்.

வீடியோ காட்சிகளைக் காண: https://youtu.be/WNwAj7BrLPc

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe