கோவையில் மாநில அளவிலான இரண்டு நாள் கராத்தே கருத்தரங்கம்

published 2 years ago

கோவையில் மாநில அளவிலான  இரண்டு நாள் கராத்தே கருத்தரங்கம்

 

கோவை: கோவையில் மாநில அளவிலான  இரண்டு நாள் கராத்தே கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முறையே பயிற்சி முடித்த மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கோவை மை கராத்தே இண்டர்நேஷனல் மையம் சார்பாக பள்ளி மாணவ,மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பயிற்சி மையம் சார்பாக 64 வது கராத்தே தேர்வு மற்றும் கராத்தே தொடர்பான இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

மை கராத்தே இண்டர்நேஷனல் மையத்தின் தலைவர், நிகான் ஷோட்டோகான் கராத்தே தலைமை பயிற்சியாளர்  தியாகு நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளராக, நிகான் ஷோட்டோகான் கராத்தே தோ சுகுகாய் ஜப்பான் இயக்குனர் மற்றும் தலைமை பயிற்சியாளர் மற்றும் இந்திய கராத்தே அமைப்பின் இணை செயலாளர் ஹன்சி கல்பேஸ் மக்வானா ஏழாவது மற்றும் எட்டாவது டான் கலந்து கொண்டு பயிற்சி முடித்த வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், கராத்தே பயில்வதால் உடல் மற்றும்  மன உறுதி வலிமை பெறுவதாகவும்,மேலும் தற்போது ஒலிம்பிக்கில் கராத்தே இடம்பெற்றுள்ள நிலையில்,புதிய உத்திகளை கராத்தே வீரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பயிற்சியாளர்கள் சிவமுருகன், சிவலிங்கம், பரத் கிருஷ்ணா, ஹேமந்த், சரண், அரவிந்த், மதன், ராஜ்குமார், மற்றும் மாணவர்களின் பெற்றோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe