கோவையில் அதிமுக.,வினர் சாலை மறியல்

published 2 years ago

கோவையில் அதிமுக.,வினர் சாலை மறியல்

கோவை: சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக போரட்டத்தில்  ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி கைதை கண்டித்து கோவையில் அதிமுக.,வினர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சட்டமன்றத்தில் எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக சட்டமன்றத்தில் நேற்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டதுடன் வெளிநடப்பு செய்தனர்.

இந்தநிலையில் இன்றும் சட்டமன்றத்தை புறக்கணித்து அதிமுகவினர் சென்னையில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் காவல்துறையினரால் கைது செய்யபட்டனர்.

இதனை கண்டித்து தமிழகம் முழுவதிலும் அதிமுக.,வினர் தர்ணா மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் திரண்ட அதிமுக தொண்டர்கள் கட்சி கொடியேந்தியபடி ஊர்வலமாக சென்று அண்ணா சிலை அருகே சாலையை மறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் அதிமுக எதிர்கட்சி தலைவர் உள்பட அதிமுகவினரை கைது செய்த காவல்துறையினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

அதிமுகவினர் இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe