கோவையிலிருந்து ஜஸ்ட் 35 கிமீ: வைதேகி நீர்வீழ்ச்சி

published 2 years ago

கோவையிலிருந்து ஜஸ்ட் 35 கிமீ: வைதேகி நீர்வீழ்ச்சி

வைதேகி நீர்வீழ்ச்சி கோவை நகரில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இது பேரூரிலிருந்து 23 கிமீ தொலைவில், நரசிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி "தொல்லாயிர மூர்த்திக் கண்டி" என்று அழைக்கப்பட்டது. இதன் பெயர் காரணம் தெரியாவிட்டாலும், இதன் தற்போதைய பெயரான வைதேகி நீர்வீழ்ச்சி என்பது இயக்குனர் சுந்தர்ராஜன் இயக்கிய ‘வைதேகி காத்திருந்தால்’ படத்தின் மூலம் இந்த அருவிக்கு வந்தது.

இந்த இடம் தற்போது கோயம்புத்தூர் நகரின் பிரபலமான சுற்றுலா தலமாக உள்ளது. இந்த இடம் நல்ல போக்குவரத்து வசதிகளுடன் இணைக்கப்படவில்லை என்றாலும் இங்கு பல சுற்றுலாப்பயணிகள் இந்த இடத்தின் இயற்கை அழகை ரசிப்பதற்காக வருகின்றனர். சில சமயங்களில் வன விலங்குகளின் தொல்லை காரணமாக பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைதேகி நீர்வீழ்ச்சி குறிப்பாக மலையேற்றம் செய்பவர்களுக்கு ஒரு விருப்பமான இடமாக உள்ளது. அடர்ந்த பசுமையான காடுகள் மற்றும் பனிமூட்டம் நிறைந்த மலைகள் இந்த இடத்திற்கு அழகு சேர்க்கின்றன. இந்தக் காடு பல மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகைகளின் தாயகமாகும். நாம் காட்டுக்குள் செல்லும்போது, ​​பறவைகள் எழுப்பும் அழகான இசையைக் கேட்கலாம். நீர்வீழ்ச்சியை நெருங்கும் போது காட்டின் அமைதியைத் துளைக்கும் தண்ணீரின் இடி முழக்கத்தைக் கேட்பது தனி சுகம்.

இந்த இடத்தைச் சுற்றி உணவகங்கள் எதுவும் இல்லாததால் இங்கு செல்லும் போது போதுமான உணவு மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வது அவசியம். இது காட்டுப் பகுதி என்பதாலும் வன விலங்குகள் வந்து செல்லும் பகுதி என்பதாலும் இங்கு குப்பைகளை வீசுவதையும் நாம் தவிர்கக வேண்டும். இது போன்ற இயற்கையின் பிடியில் எஞ்சி இருக்கும் இடங்களை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருப்பது நம் பொறுப்பு என்பதால், குப்பைகளை நாமே சேகரித்து எடுத்த வரத் தேவையான எற்பாடுகளையும் செய்துகொள்வது அவசியம். இது பாறைகள் நிறைந்த பகுதி என்பதால் மலையேற்றத்திற்கு வசதியான காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்கு செல்ல அனுமதி ஏதும் தேவையில்லை என்றாலும், ஜங்கிள் சஃபாரிக்கு செல்ல உள்ளூர் வன அலுவலரிடம் முன் அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

கோவை சர்வதேச விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட 50 கிமீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவிலும், காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து 27 கிமீ தொலைவிலுமுள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு நகரப் பேருந்து இல்லாத காரணத்தினால் தனியார் டாக்ஸியிலோ அல்லது சொந்த வாகனத்திலோ தான் செல்ல முடியும். இங்கு மாலை 5.30 மணிக்கு மேல் இருக்க அனுமதி கிடையாது என்பதையும் மனதில் வைத்துக்கொண்டு வைதேகி நீர்வீழ்ச்சிக்கான உங்கள் விசிட்-டை பிளேன் செய்து மகிழுங்கள்.

இந்த அழகிய நீர்வீழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பை நமது Photostory பக்கத்தில் இங்கே காணலாம்: https://newsclouds.in/news/1421/A_mesmerizing_waterfall_near_Coimbatore:_Photos

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe