குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்கா...?! அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதோ...

published 2 years ago

குளிக்கிறதுல இவ்ளோ விஷயம் இருக்கா...?! அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் இதோ...

நீங்கள் குளிக்கும் முறை உங்கள் செரிமானத்தைப் பாதிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டுள்ள ஆயுர்வேத மருத்துவர் டிம்பில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குளிக்கும்போது நம் நினைவில் கொள்ள வேண்டிய 3 எளிய விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் என்ன கூறியுள்ளார் என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

#1 வயிறு நிறைய உணவு சாப்பிட்ட பிறகு குளிக்க வேண்டாம். இது நம் வயிறு மற்றும் குடலில் உள்ள உஷ்ண ஆற்றலான செரிமான நெருப்பைப் பலவீனப்படுத்துகிறது. இந்த நெருப்பானது செரிமானத்திற்கும்,  ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் மற்றும் ஒருங்கிணைப்பதற்கும் உதவுகிறது. செரிமான செயல்முறைக்கு உதவ நம் உடல் செரிமான அமைப்புக்கு இரத்தத்தைச் செலுத்துகிறது.

ஆனால் குளிப்பது, வயிற்றிலிருந்து இந்த இரத்த ஓட்டத்தையும் ஆற்றலையும் திசை திருப்பி தோலின் மேற்பரப்பிற்குச் செலுத்துகிறது. குளிக்கும் போது, உடல், தண்ணீரால் ஏற்படும் ஒரு தாழ் வெப்பநிலையை அடைந்து, நம் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, நரம்பு மண்டலத்தைத் தளர்த்துகிறது. மேலும் வியர்வை சுரப்பிகளைத் தூண்டி நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. 

வயிறு நிறைய உணவு சாப்பிட்ட பிறகு குளிப்பது நமது உடலின் இந்த செயல்பாடுகளைக் குழப்பி, வயிற்றுப் பிடிப்பு, அஜீரணம் அல்லது வயிறு வீக்கத்தை ஏற்படலாம். குளிப்பதற்குச் சாப்பிட்ட பிறகு குறைந்தது 30-45 நிமிடங்கள் காத்திருப்பது நல்லது.

#2 குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்ளவும். குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான அல்லது அறை வெப்பநிலை தண்ணீரைக் குடிப்பது உடலில் இரத்த அழுத்த அளவைக் குறைக்க உதவும். 

வெதுவெதுப்பான நீரைக் குடிப்பதால், நம் உடலின் வெப்பநிலை அதிகரித்து, உடலை உள்ளே இருந்து வெப்பமாக்கும். இதன் விளைவாகத் தோலின் மேற்பரப்பில் இதேபோன்ற சுற்றோட்ட அமைப்பு விரிவடைந்து நமது இரத்த அழுத்தம் சீரடையும்.

#3 சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு குளிப்பதைத் தவிர்க்கவும். சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நம் உடல் குளிர்ச்சியடையத் தொடங்கி, ​​மெதுவாக உடல் படுக்கைக்குச் செல்ல தயார் ஆகிறது. படுக்கைக்குச் செல்வதற்கு முன் குளித்தால், அது நம் சருமத் துளைகளை அடைத்து, உடலின் வெப்பத்தைத் தடுக்கும். உடலின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அது இரவு உறக்கத்தைச் சீர்குலைக்க நேரிடும்.

நாம் குளிக்கும்போது, ​​உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தக் கழுத்திற்குக் கீழே வெதுவெதுப்பான நீரையும் முகத்திற்கு அறையின் வெப்பநிலையிலுள்ள தண்ணீரையும் பயன்படுத்த வேண்டும். இது நமது உடலின் மென்மையான உணர்திறன் உறுப்புகளான கண், மூக்கு ஆகியவற்றைப் பாதுகாக்கும்.

குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமே வெந்நீரைப் பயன்படுத்த வேண்டும். நம் உடல் காயங்களிலிருந்து மீண்டு வரக் குளிர்ந்த நீர் குளியல் அல்லது ஐஸ் குளியல் எடுக்க வேண்டும். ஐஸ் குளியல் உடலின் வீக்கத்தைக் குறைத்து, உடலிலிருந்து லாக்டிக் அமிலத்தை வெளியேற்றி, இரத்த நாளங்களை இறுக்கமாக்குவதன் மூலம் நம் உடல்நிலை சீராக உதவுகிறது. நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த, குளிப்பதற்கு முன் உடல் முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்வதும் நல்ல பயன் அளிக்கும். 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், குளிக்கும் பொழுது நேரடியாகத் தலையிலோ அல்லது தோள்பட்டையிலோ நீரை ஊற்றினால், அது உடலின் வெப்ப நிலையை திடீரென்று மாற்றி, நம் இரத்த அழுத்தத்தைக் கூட்டக் கூடும் என்பதால், முதலில் பாதம், முட்டி, இடுப்புப் பகுதிகளில் தண்ணீரை ஊற்றிய பிறகு உடலின் மேல் பகுதியில் தண்ணீரை ஊற்றுவது சிறந்தது என்பதும் கூடுதல் தகவல்.

 

இதையும் பார்க்கலாமே..

கோவையில் தீபாவளி அதிரடி சலுகையாக ரூ.16000 மதிப்புள்ள மொபைல் ரூ.2800 மட்டுமே…: https://youtu.be/vYjLHpSsQ6E

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe