கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகளால் வேரோடு சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்

published 2 years ago

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் காட்டு யானைகளால் வேரோடு சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்

கோவை: குப்பேபாளையத்தில் உள்ள தோட்டங்களுக்குள் யானைக் கூட்டங்கள் நுழைந்து, நுாற்றிற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்துள்ளன.

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள குப்பேபாளையத்தில், 300 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது.

இப்பகுதிக்கு ஒரு மாதத்திற்கும் மேலாக, நாள்தோறும் இரவு நேரங்களில் காட்டு யானைக் கூட்டம், வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளை நிலங்களுக்குள் புகுந்து வருகிறது.

கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் தோட்டங்களுக்குள் புகும் காட்டு யானைக் கூட்டம், பயிர்களைச் சேதப்படுத்திச் செல்கிறது.

குப்பேபாளையத்தில், மூன்று நாட்களில், நுாற்றிற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை, காட்டு யானைக் கூட்டம் வேரோடு சாய்த்துள்ளது. அதேபோல், வாழை மரங்கள் மற்றும் சுரைக்காய் உள்ளிட்டவற்றையும் சேதப்படுத்தியுள்ளன.

விவசாயிகள் கூறுகையில், "குப்பேபாளையம் முதல் நரசீபுரம் வரையுள்ள வனப்பகுதியில், 30 காட்டு யானைகள் உள்ளன. கூட்டமாகவும், தனியாகவும், நாள்தோறும் மாலை, 6:00 மணிக்கு மேல் வனப்பகுதியை விட்டு வெளியேறி, விளைநிலங்களுக்கு உணவு தேடி வருகின்றன.

விவசாயி பழனிச்சாமியின் தோட்டத்தில் அரை ஏக்கரில் பயிரிட்டிருந்த சுரைக்காய் சேதமடைந்தது. இளங்கோவன் என்பவரின் தோட்டத்தில் 25 தென்னை மரங்கள், சண்முகம் என்பவரின் தோட்டத்தில் 50 தென்னைகள், கனகராஜ் என்பவரின் தோட்டத்தில் 16 தென்னைகள், வெள்ளியங்கிரி என்பவரின் தோட்டத்தில் 7 தென்னைகள், இன்னும் சிலரின் தோட்டங்களிலும் உள்ள மரங்களையும் வேரோடு சாய்த்திருக்கின்றன. விவசாயிகளுக்குப் பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூடுதல் குழுக்கள் அமைத்து, காட்டு யானைகள் விளை நிலங்களுக்கு வரும் முன்பே தடுத்து, மீண்டும் வனப்பகுதிக்குள் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe