கோவையில் பந்த் தேவையா..? இல்லையா..? - மக்கள் கருத்து

published 2 years ago

கோவையில் பந்த் தேவையா..? இல்லையா..? - மக்கள் கருத்து

கோவையில் 31ம் தேதி பா.ஜ.க சார்பில் பந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த பந்த் குறித்து கோவை மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. கோவை மக்கள் வாட்ஸ்-அப் மூலமாக தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அந்த கருத்துக்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளது. மக்கள் கருத்துக்களுக்கு நியூஸ் க்ளவுட்ஸ் நிர்வாகம் பொறுப்பேற்காது. 

 

மணியன் வரி ஆலோசகர் உடுமலைப்பேட்டை

வேண்டாம் என்பது என் கருத்து. காரணம்  

1.மீண்டும் விளைவுகள் காண முடியாது

2. தமிழ் நாடு அரசு NIA க்கு முறைப்படி கொடுக்கிறது

3. முக்கிய இஸ்லாமிய சகோதர தலைவர்கள் தங்கள் ஒத்துழைப்பு கொடுத்து பேட்டி கொடுத்துள்ளார்கள். ஆகையால் பந்த் வேண்டாம் என்பது என் தனிப்பட்ட கருத்து


தெ.ராஜ்குமார் கோவை

இது வெறும் அரசியல் மட்டுமே. குறிப்பிட்ட ஒரு மதத்தை சேர்ந்தவர் என்பதால் பிரச்சனை எழுப்புகிறார்கள். இதுவே மாற்றவர் காரில் இது போன்று வெடித்திருந்தால் அவர்களை UAPA சட்டம் மூலம் கைது செய்திருந்தால், அப்பொழுது தமிழக அரசு பொய் சட்டம் போட்டுவிட்டார்கள் என்று பந்த் செய்திருப்பார்கள்.

ரஞ்சித்

கண்டிப்பாக தேவை. அரசின் மெத்தனமான பதிலுக்கு எதிர்வினை வேண்டும். இது கட்சி மற்றும் மத பாகுபாடு இன்றி, கோவை மற்றும் தமிழக நலன் வேண்டி இருக்க வேண்டும்.

கோபால்

பாரதிய ஜனதா கட்சியின் பந்த் தேவையான ஒன்று 

மோகன், போத்தனூர்

பந்த் தேவையில்லாத ஒன்று


சசிக்குமார்

முழு அடைப்பு தேவை

ஹர்ஷத்

தேவை இல்லாத ஒன்று

ஹோமனாப்

தேவையில்லை பிரச்சினைகளை கிளப்ப வேண்டும் என்று பந்த் செய்ய நினைக்கிறார்கள்

கோமதி

பந்த் செய்ய இது சரியான நேரம் இல்லை

முத்துசாமி

பந்த் தேவையில்லை

சுரேஷ் பாபு

தற்பொழுது இருக்கும் நிதி நிலையில் மக்கள் மிகவும் சிரமமாக வாழ்க்கையை முன் நடத்தி செல்கின்றனர் அதனால் இந்த பந்த் தேவை இல்லாத ஒன்று

ஆர்.எம்

கண்டிப்பாக வேண்டும்... கோவை மாநகர் பாதுகாப்பான நிலைமையில் இல்லை... இதற்கு யாராவது ஒரு முடிவு எடுக்க வேண்டும்...
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe