வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளிலைத் திருடி வந்த வாலிபரைத் துரத்திப் பிடித்த பயிற்சித் துணை-ஆய்வாளர்

published 2 years ago

வாகன சோதனையின் போது மோட்டார் சைக்கிளிலைத் திருடி வந்த வாலிபரைத் துரத்திப் பிடித்த பயிற்சித் துணை-ஆய்வாளர்

 

கோவை: திண்டுக்கல்லில் பயிற்சி துணை-ஆய்வாளராக வேலை செய்து வருபவர் அருண்குமார். இவர் தற்போது கோவைக்குப் பாதுகாப்புப் பணிக்காக வந்துள்ளார்.

இந்த நிலையில் துணை-ஆய்வாளர்  அருண்குமார் நேற்று இரவு  உக்கடம் காவல்துறையுடன் சேர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது 2 வாலிபர்கள் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களைப் பார்த்த துணை-ஆய்வாளர்  அருண்குமார் அவர்களைத் தடுத்து நிறுத்தி மோட்டார் சைக்கிளின் ஆவணங்களைக்  காண்பிக்கும்படிக் கூறினார்.

இதனால் அந்த வாலிபர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அந்த வாலிபர்களில் ஒருவர்த் தனியாகச் சென்று மாயமானர். இதனைப் பார்த்த மற்ற வாலிபரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த துணை-ஆய்வாளர்  அருண்குமார் அந்த வாலிபரைத் துரத்திச் சென்றார். 2 கிலோ மீட்டர் தூரம் அந்த வாலிபர் ஓடினார். ஆனாலும் துணை-ஆய்வாளர்  அருண்குமார் விடாமல் அந்த வாலிபரைத் துரத்தி மடக்கிப் பிடித்தார்.

பின்னர் உடனே அவர் அந்த மோட்டார் சைக்கிளின் எண்ணை வைத்து விசாரித்தார். அதில் அந்த மோட்டார் சைக்கில் போத்தனூரைச் சேர்ந்தவரது என்பதும் அவரைத் தாக்கி 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளைத் திருடி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து துணை-ஆய்வாளர்  அருண்குமார் மடக்கிப் பிடித்த வாலிபரை உக்கடம் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அந்த வாலிபர் காளப்பட்டியைச் சேர்ந்த ரத்திஷ் (வயது 20) என்பது தெரியவந்தது.

மேலும் போத்தனூரில் இருந்து மோட்டார் சைக்கிளைத் திருடி வந்ததால் இதுகுறித்து போத்தனூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் உக்கடம் வந்து அந்த வாலிபரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளைத் திருடி வந்த வாலிபரை 2 கிலோ மீட்டர் தூரம் துரத்திப் பிடித்த பயிற்சி துணை-ஆய்வாளர்  அருண்குமாரைப் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் பாராட்டினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe