ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா

published 2 years ago

ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா

கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியில் 33வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கினார். இதில் 1,037 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். 

தொடர்ந்து ஒன்றிய கல்வி இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:

இன்று பட்டம் பெறும் நீங்கள் நாளைய தலைவர்கள். இந்தியாவில் பொறியியல் கல்லூரிகள் மாணவர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க பாடுபட வேண்டும்.

தேசிய கல்வி கொள்கை  மாணவர்கள் தங்களுக்கான கல்வியை சுதந்திரமாக தேர்வு செய்ய உதவுகிறது.  பல பாடப்பிரிவுகள் உள்ளன.

புதிய தொழில்களுக்கு அரசு உறுதுணையாக உள்ளது. தொழில் துவங்குவதற்கான நடைமுறைகள் சுலபப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் உள்ள வாய்ப்புகளை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சிறந்த கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்திற்காக நாம் இலக்குகளை கொண்டு பயணித்து வருகிறோம். புதிய தொழில் யோசனைகளுடன் வரும் இளைஞர்களுக்கு அரசு உதவ தயாராக உள்ளது.

முயற்சி செய்து கொண்டே இருங்கள் உங்கள் இலக்கு அருகில் தான் உள்ளது.  உங்கள் பணி சிறியதோ பெரியதோ அதில் சிறப்பாக செயல்படுங்கள். கல்வி இதோடு முடிந்துவிடாது. நேரம் மேலாண்மை என்பது உங்கள் இலக்கை அடைவதற்கான முக்கியமான வழியாகும். ஒரு யோசனை கிடைத்தால் அது குறித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள முயன்றிடுங்கள்.

நாட்டையும், வீட்டையும் பெருமைப்படுத்துங்கள்.  என் தந்தை ஒரு நாளைக்கு 5 மைல் நடப்பார், நான் மாருதி  கார் ஓட்டினேன், என் மகன் பார்சூனர் கார் ஓட்டினார், என் பேரன் மெர்சிடைஸ் கார் ஓட்டுவார், அவரது மகன் மீண்டும் நடப்பார் என்பதைப் போல சுலபமான நேரம் மனிதனை வலிமையற்றவனாக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில்  சித்தூர் இந்திய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் பாலசுப்ரமணியம், ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி, நிர்வாக அறங்காவலர் ஆதித்யா, கல்லூரி முதல்வர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe