கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் பிரிவு அமைப்பு

published 2 years ago

கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் பிரிவு அமைப்பு

கோவை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபா் 29-ந் தேதி தொடங்கி கடந்த சில நாள்களாக பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த 2 நாட்களாக மழை தொடா்ந்து பெய்து வருகிறது.

பருவமழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பாதிப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில், முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கோவை அரசு மருத்துவமனையில் 40 படுக்கைகளுடன் சிறப்பு காய்ச்சல் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது:

பருவ மழைக் காலங்களில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிக்கக் கூடும். தற்போது புறநோயாளிகள் பிரிவில் காய்ச்சல் பாதிப்புடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பருவமழை தீவிரமடையும்போது நோய்த் தொற்று பாதிப்புகளும் அதிகரிக்கும்.

அப்போது உள்நோயாளிகளாக சிகிச்சை எடுத்துகொள்பவா்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 40 படுக்கைகளுடன் கூடிய சிறப்பு காய்ச்சல் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. டெங்கு சிகிச்சைக்கு ஏற்கனவே தனி பிரிவு செயல்பட்டு வருகிறது. டெங்கு மற்றும் சிறப்பு காய்ச்சல் பிரிவுகளில் 24 மணி நேரமும் பணியாற்றும் வகையில் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் மருத்துவப் பணியாளா்கள் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், “பருவ மழைக் காலங்களில் குடிநீா் மூலம் அதிக அளவு நோய்த் தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மழைக் காலங்களில் கட்டாயம் குடிநீரைக் காய்ச்சி வடிகட்டிதான் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீரை மட்டுமே கொடுக்க வேண்டும்.
பள்ளி மாணவா்களிடையே காய்ச்சல், சளி போன்ற பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துகொள்ள வேண்டும்.” என்றனா்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe