மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவர் மகன் மகளின் படிப்பிற்காக கண்ணீர் மல்க கோரிக்கை...

published 1 day ago

மின்சாரம் தாக்கி கைகளை இழந்தவர் மகன் மகளின் படிப்பிற்காக கண்ணீர் மல்க கோரிக்கை...

கோவை: மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(40).இவர் 2008 ம் ஆண்டு அப்பகுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவரது இடது கை முற்றிலும் பறிபோனது. வலது கை, கால்கள், வயிற்று பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதை அடுத்து அந்த வேலையை விட்டுவிட்டு காய்கறி மூட்டை தூக்கி சுமக்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவியும் அங்குள்ள மில் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

இவர்களது மகள் 12ம் வகுப்பும் மகன் தனியார் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களது படிப்பு செலவிற்கு உதவி கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் ஊனமுற்றவர்களுக்கான மாத உதவித்தொகை மட்டுமே அரசாங்கத்திடம் இருந்து வருவதாகவும் மூட்டை தூக்கும் தொழிலில் போதிய வருமானம் இல்லை என கூறிய அவர் கைகள் இல்லாததால் பலரும் வேலை தருவதற்கு மறுப்பதாக கூறினார். மேலும் தனது மகனை படிக்க வைத்து விட வேண்டும் என்று தானும் தனது மனைவியும் கிடைத்த வேலைகளை செய்து படிக்க வைத்து வருவதாகவும் தற்பொழுது மகனின் படிப்பு செலவிற்கு பணம் இல்லாமல் படிப்பை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்த அவர் அரசாங்கமோ அல்லது யாரேனும் மகனின் படிப்பு செலவிற்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இவருக்கு உதவி செய்ய விரும்புவோர் 93842 01611 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்…

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe