கோவை மாநகராட்சியுடன் மலுமிச்சம்பட்டி ஊராட்சியை இணைப்பதை கண்டித்து அடையாள கடை அடைப்பு போராட்டம்...

published 1 day ago

கோவை மாநகராட்சியுடன் மலுமிச்சம்பட்டி ஊராட்சியை இணைப்பதை கண்டித்து அடையாள கடை அடைப்பு போராட்டம்...

கோவை: கோவை, மாநகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகள், நான்கு பேரூராட்சிகள் மற்றும் ஒரு நகராட்சி என, 14 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்பட்டு, அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இதற்கு சில ஊராட்சி மக்களிடம் இருந்து எதிர்ப்புகள் வரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மலுமிச்சம்பட்டி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வண்ணம் மலுமிச்சம்பட்டியில் ஒரு நாள் அடையாள கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். சில கடைகளுக்கு முன்பு கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கும் பட்சத்தில் வரி அதிகரிக்கும் என்றும், 100 நாள் வேலை திட்டம் ஆகியவை பாதிக்கப்படும் என்று தெரிவித்தனர். இங்கு பெரும்பாலானோர் வெளியூர்களில் இருந்து வந்து தங்கி இருப்பர்கள் தான் என்றும் மாநகராட்சியுடன் இணைக்கும் போது அவர்களுக்கும் வாடகை அதிகரிக்கும் என கூறினர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe