கோவை சேலம் பாசஞ்சர்  ரயில் தொடர் ரத்து ;பயணிகள் அவதி..!

published 2 years ago

கோவை சேலம் பாசஞ்சர்  ரயில் தொடர் ரத்து ;பயணிகள் அவதி..!

கோவை: கோவை - சேலம் பாசஞ்சர் ரயில், தொடர்ந்து ரத்தாவதால் பயணிகள் கவலை அடைந்துள்ளனர். 

கொரோனா காரணமாக, இரண்டரை ஆண்டாக நிறுத்தப்பட்டிருந்த, கோவை - சேலம் பாசஞ்சர் ரயில், கடந்த ஜூலை 11 முதல் மீண்டும் இயங்கத் துவங்கியது.

இரண்டு நாள் மட்டுமே இயங்கிய நிலையில், காவேரி - ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி நடந்ததால் ஜூலை, 13 முதல், 24 வரை, 10 நாட்களுக்கு ரயில் ரத்து செய்யப்பட்டது. ஆகஸ்ட்-செப்டம்பர் மாதம் ரயில் முழுமையாக இயங்கியது. கோவை - திருப்பூர் இடையே பொறியியல் மேம்பாட்டுப் பணி காரணமாக, அக்., 13 முதல் 30 வரை, 17 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டது. 

பணி முடிந்து, அக்., 31 முதல் மீண்டும் இயங்கத் துவங்குமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காவேரி - ஈரோடு இடையே பொறியியல் மேம்பாட்டுப் பணி நடப்பதால், அக்., 31 முதல் நவ., 29 வரை, 30 நாட்களுக்கு முழுமையாக ரயில் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது. 

முதல் கனெக்ஷனுக்கான விடை

இந்த கனெக்ஷனுக்கான படத்தை காண இதற்கு முந்தய செய்தியை காணலாம்.

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், "கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் மாவட்டத்தை இணைக்கும் ஒரே பாசஞ்சர் ரயில் இது தான். ஞாயிற்றுக்கிழமை தவிர, வாரத்தின் ஆறு நாட்கள் இயங்குவதால், ஆயிரக்கணக்கான பயணிகள், தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் மாதாந்திர சீசன் டிக்கெட் எடுத்து பயணித்து வந்தனர். தற்போது ரயில் ரத்து செய்யப்படுவதால் அவதியடைந்து வருகிறோம். பகுதி அளவிலாவது பாசஞ்சர் ரயிலை இயக்க வேண்டும்" என்றனர்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe